மொட்டுவிலிருந்து அதாஉல்லா அவுட் ;அம்பாறை திருமலையில் களமிறங்குகிறது குதிரை
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதனால் அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தேசிய காங்கிரஸின் குதிரை சின்னத்தில் அதாஉல்லா களமிறங்கவுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட இரண்டு முஸ்லிம்களுக்கே வாய்ப்பளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் தேசிய காங்கிரஸிற்கு மூவர் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என அதாஉல்லா கோரியிருந்தார்.எனினும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்காவின் கடுமையான எதிர்ப்பினால் இரண்டு முஸ்லிம்களுக்கே வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதனால் பாராளுமன்ற தேர்தலில் தனித் போட்டியிட அதாஉல்லா தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவின் புதல்வரும். சம்மாந்துறை பிரதேசத்திலிருந்து மற்றுமமொருவரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)