இலங்கையின் சுதந்திர தினத்திற்கு சவூதி தூதுவர் வாழ்த்து
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 76ஆவது சுதந்திர தினத்திற்கு இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, இலங்கை அரசு மற்றும் அதன் நேசமிகு குடிமக்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கைக் குடியரசு மேலும் முன்னேற்றமும் செழிப்பும் பெற வேண்டும் என அவர் வாழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)