மாவத்தகம பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவர் பொதுஜன பெரமுனவில் இணைவு

மாவத்தகம பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவர் பொதுஜன பெரமுனவில் இணைவு

ஐக்கிய தேசிய கட்சியின் குருநாகல் மாவட்ட சிரேஷ்ட உறுப்பினரும், மாவத்தகம பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவருமான முஹம்மட் ரிபாழ், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள வட மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம் முஸம்மிலிற்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துகொண்டார்.

குருநாகல் மாவட்ட சிங்கள வர்த்தக சங்கம் மற்றும் முஸ்லிம் வர்த்தக சங்கம் ஆகியவற்றின் உறுப்பினர்களுடன் சமகால அரசியல் தொடர்பிலான விழிப்புணர்வு செயலமர்வொன்று குருநாகல் தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற நேற்று செவ்வாய்க்கிழமை (11) இரவு நடைபெற்றது.

வட மேல் மாகாண ஆளுநரின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் போதே, மாவத்தகம பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவர் முஹம்மட் ரிபாழ், முஸம்மிலிற்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவில் இணைந்துகொண்டார்.

நீண்ட காலமாக ஐக்கிய தேசிய கட்சியின் மாவத்தகம பிரதேச சபை உறுப்பினராகவும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவராகவும் முஹம்மட் ரிபாழ் சேவையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் விகாராதிபதி ரேகவ ஜினாரத்ன தேரர், குருநாகல் மாநகர முதல்வர் துஷார சஞ்சீவ, இப்பாகமுவா பிரதேச சபை தவிசாளர் யு.கே. சுமித், வடமேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் சட்டத்தரணி அதுல விஜேசிங்க உள்ளிட்ட பலர் கலந்துசிறப்பித்தனர்.