இந்த அரசாங்கத்தில் மூன்றாம் நிலைக்கு கட்சியை தள்ள இடமளிக்க முடியாது: தயாசிறி

இந்த அரசாங்கத்தில் மூன்றாம் நிலைக்கு கட்சியை தள்ள இடமளிக்க முடியாது: தயாசிறி

இந்த அரசாங்கத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தற்பொழுது பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருவதாக அக்கட்சியின் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை மூன்றாம் நிலையில் வைத்து பார்க்கும் போக்குக்கு தான் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கின்றேன். கட்சியின் செயலாளர் என்ற வகையில் ஏனைய அனைவரை விடவும் கட்சி குறித்து அதிக பொறுப்பு காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எந்தவொரு சவால் வந்தாலும் அதற்கு முகம்கொடுத்து கட்சியைப் பாதுகாக்கும் நடவடிக்கையை முன்னெடுக்க தயாராகவுள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அரசாங்கத்தை வெற்றிபெறச் செய்ய உந்து சக்தியாக செயற்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை கீழ் மட்டத்துக்கு இழுத்து வீச இடமளிக்க முடியாது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஹோமாகம வித்தியாலயத்தில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.