இராஜதந்திரிகளின் பணி திருப்தியடைய முடியாதுள்ளது: மஹிந்த
வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதுவர்கள் ஆற்றிவரும் பணி தொடர்பில் திருப்தியடைய முடியாதுள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
தோல்வியடைந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரையோ, ஓய்வு பெற்ற அரச அதிகாரியையோ தூதுவர் சேவையில் அமர்த்தும் பணியையே இதுவரையில் நாட்டில் காணப்பட்ட அரசாங்கங்கள் அனைத்தும் செய்தது.
1948 சுதந்திரத்தின் பின்னர் ஒரு சில தூதுவர்களே நாட்டின் முன்னேற்றத்துக்காக பங்காற்றியுள்ளதாகவும், ஏனைய அனைவரும் தமது சுய லாபங்களுக்காக செயற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது நிருவாகத்தின் கீழ் நாட்டுப் பற்றுள்ள தூதுவர்களை நியமித்து வருவதையிட்டு சந்தோசப்பட முடியுமாகவுள்ளது. நாட்டின் நற்பெயரையும், கௌரவத்தையும் சர்வதேச ரீதியில் உயர்த்துவதற்காக அர்ப்பணத்துடன் செயற்படுபவர்களை நியமிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Comments (0)
Facebook Comments (0)