கல்முனையில் Supper Muslim எனும் அடிப்படைவாத அமைப்பு: திவயின
Super Muslim என்ற ஒரு அடிப்படைவாத அமைப்பு இலங்கையின் கல்முனை நகரில் இயங்குகின்றது என ஞாயிறு திவயின (13) செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்த அமைப்பின் தலைவர் டாக்டர் கலந்தர்லெப்பை முஹம்மத். இவர் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கலகத்தில் படித்தவர். 2004 சுனாமி அணர்த்தத்தின் போது அரசசார்பற்ற அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து பணம் வசூலித்து அப்பணத்தின் மூலமே இவ்வமைப்பை துவங்கினார்.
அந்தக் காலப்பகுதி தொடக்கம் இவர் தனது கொள்கையைப் பரப்பி வருகின்றார். 2019 இல் இவரின் பிரச்சாரம் இன்னும் தீவிரமடைந்துள்ளதுடன் இவருடன் தற்போது 300 பேர் வரை உள்ளனர்.
இன்னும் 1,000க்கு மேற்பட்டோர் இவர்களுடன் கைகோர்த்துள்ளதாக இராணுவப் புலனாய்வுத் துரை கூறியுள்ளது. இப்போது கல்முனையில் வீடுகளைப் பயன்படுத்தி ஆண், பெண் இரு சாராருக்கும் தீவிரவாத பிரச்சாரங்களை கலந்தர் லெப்பை போதித்து வருகிறார்.
இவர்களின் நோக்கம் ஷரீஆ சட்டத்தை இலங்கையில் அமுல்படுத்துவதாகும். இவ்வமைப்பைச் சேர்ந்த ஆண்களுக்கு தங்களின் தாய், தந்தை, சகோதர சகோதரிகளுடன் தொடர்பை ஏற்படுத்த முடியாது என்றும் நோய்வாய்ப்பட்டால் மருத்துவம் செய்யக் கூடாது என்றும் தலைவரினால் கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது.
Comments (0)
Facebook Comments (0)