வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாகிஸ்தான் நிவாரணம் வழங்கல்
அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் வெல்லம்பிட்டி மற்றும் மெகட கொலன்னாவ ஆகிய பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட சுமார் 650 குடும்பங்களுக்கு இனம், சாதி, மதம் ஆகியவற்றை கடந்து கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தினால் நிவாரணம் வழங்கப்பட்டது.
மெகட கொலன்னாவ அல் நூரானியா பள்ளிவாசல் வளாகத்தில் வைத்து இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) பஹீம் உல் அசிஸினால் இந்த நிவாரணங்கள் வழங்கப்பட்டன.
மேலும் வாசிக்க: புல்மோட்டையில் நடந்தது என்ன?
இலங்கையில் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாகிஸ்தானின் மனிதாபிமான நிவாரண உதவி வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இம்முயற்சி அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)