பிரதமர் - இந்திய உயர் ஸ்தானிகர் சந்திப்பு
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினை கொழும்பிலுள்ள அலரி மாளிகையில் உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று (27) புதன்கிழமை காலை முதற் தடவையாக சந்தித்தார்.
மஹிந்த ராஜபக்க்ஷ, இலங்கை பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டு 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த தருணத்தில் இந்திய தலைமைத்துவத்தின் வாழ்த்துக்களை உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்திருந்தார்.
சரியாக ஆறு வருடங்களுக்கு முன்னர் 2014 மே 26ஆம் திகதி புதுடில்லியில் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற நிகழ்வில் உத்தியோகபூர்வமாக அவரை முதற் தடவையாக சந்தித்து அவருடன் உரையாடிய நிகழ்வினை பிரதமர், இந்த சந்தர்ப்பத்தில் நினைவு கூர்ந்த அதே நேரம் 2020 பெப்ரவரியில் இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயம் தொடர்பாகவும் அவர் நினைவூட்டியிருந்தார்.
இரு நாடுகள் இடையிலான ஒத்துழைப்பினை மேலும் வலுவாக்குதல்மற்றும்இருதரப்பு உறவுகளை மேலும் ஆழமாக்கும் ஆணையுடன் தான் இலங்கைக்கு வருகை தந்திருப்பதாக உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே குறிப்பிட்டதுடன் கொவிட்டுக்கு பின்னரான பொருளாதார மீட்சி மற்றும் கொவிட் சவால்களை எதிர்கொள்ளல் ஆகிய விடயங்களில் இலங்கையுடன் தோளோடு தோள் நின்று உதவுவதற்கு இந்தியா தயாராக இருப்பதாகவும் உறுதியளித்திருந்தார்.
உணவுப் பாதுகாப்பு, சுகாதார பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்ப துறையில் ஒத்துழைப்பு, சுற்றுலாத்துறை பரிமாற்றங்கள், அபிவிருத்தி ரீதியான ஒத்துழைப்பு, சிறந்த முதலீடுகள் ஆகியவை இந்த விடயத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்ட துறைகளாக உள்ளன.
இந்திய அரசாங்கத்துடனும் மக்களுடனும் நீடித்திருக்கும் உறவு குறித்து இந்த சந்தர்ப்பத்தில் நினைவூட்டிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஒத்துழைப்புக்கான புதிய மார்க்கங்கள் ஊடாக அந்த இருதரப்பு உறவானது மேலும் வலுவடையும் என்ற தனது நம்பிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்.
இலங்கை இந்தியா இடையிலான தொடர்புகள் மற்றும் பகிரப்பட்டபௌத்த பாரம்பரியம் ஆகியவை இரு நாடுகளுக்கும் இடையிலான மக்களின் பிணைப்புக்கும் அதேபோல மக்களிடையிலான சிறந்த தொடர்புகளை பேணுவதற்கும் ஆதாரமாக அமையுமென இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இணங்கியிருந்தார்.
மேலும் இவ்வாறான ஒத்துழைப்புக்களை மேலும் வலுவாக்கும் செயற்பாடுகளை தீவிரப்படுத்துவதற்காக உயர் ஸ்தானிகராலயத்தினை தொடர்புகொண்டு ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுமாறு தனது பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப் போவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதேவேளை ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் மறைவுக்கு இந்திய அரசாங்கத்தின் ஆழ்ந்த அனுதாபங்களை பிரதமரிடம் உயர்ஸ்தானிகர் தெரிவித்திருந்தார்.
Comments (0)
Facebook Comments (0)