பயணக் கட்டுப்பாடுகள்: இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட 11 விடயங்கள்

பயணக் கட்டுப்பாடுகள்: இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட 11 விடயங்கள்

நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டினை நீடிப்பது தொடர்பில் இன்று (24) திங்கட்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட 11 முக்கிய விடயங்கள்:

1.நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் பயணக் கட்டுப்பாடுகள் ஜுன் மாதம் 7ஆம் திகதி திங்கட்கிழமை வரை நீடிக்கும்
2.எனினும் அத்தியாவசியப் பொருள்களை கொள்வனவு செய்வதற்காக, மே 25ஆம், மே 31ஆம் மற்றும் ஜூன் மாதம் 04ஆம் திகதிகளில் அதிகாலை 4.00 மணி முதல் இரவு 11.00 பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.
3.பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் நாட்களில், அத்தியாவசிய பொருள்களை கொள்வனவு செய்ய, அருகிலுள்ள கடைகளுக்கு சென்று திரும்பலாம்
4.பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் நாட்களில் சில்லறைக் கடைகள், பாமசிகள், பேக்கரிகள், மரக்கறி, பழக் கடைகள் மாத்திரம் திறக்க முடியும்
5.பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் நாட்களில் பொருட் கொள்வனவிற்காக வீடுகளில் இருந்து ஒருவர் மாத்திரமே வெளியே செல்ல முடியும்
6.வாகன போக்குவரத்தை மட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன
7.அரச, தனியார் பஸ்கள் மற்றும் புகையிரதம் ஆகிய சேவைகள் நாளை (25) செயற்படாது
8.7ஆம் திகதி வரை மதுபானசாலைகள் மூடப்படும்
9.பயணத் தடை நீக்கப்படும் நாட்களில் தேசிய அடையாள அட்டை இலக்க முறையில் அமுல்படுத்தப்படாது
10.பயணத் தடை அமுல்படுத்தப்படும் நாட்களில் உணவு, மரக்கறி, அத்தியவசியப் பொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படும்
11.வீடுகளை விட்டு வெளியேறும் போது சுகாதார வழிகாட்டல்களை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்

-விடியல்-