நான் தலைமறைவாகவில்லை: ஹரீஸ்

நான் தலைமறைவாகவில்லை: ஹரீஸ்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் முரண்பட்டுக்கொண்டு நான் தலைமறைவாகியுள்ளதாக இணையத்தளமொன்றில் வெளியான செய்தி முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் நிராகரித்துள்ளார்.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் நியமனப் பத்திரத்தில் தான் கையெழுத்திட்டுள்ளதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவித்தார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் கையெழுத்திடும் நிகழ்வு இன்று காலை கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமின் இல்லததில் இடம்பெற்றது. இதில் நானும் கலந்துகொண்டதாக அவர் குறிப்பிட்டார்.