திங்கட்கிழமை கூடுகிறது பாராளுமன்ற பேரவை
பாராளுமன்ற பேரவை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் எதிர்வரும் திங்கட்கிழமை (23) பிற்பகல் 4.00 மணிக்கு பாராளுமன்றத்தில் கூடவுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் வெற்றிடங்களுக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நியமனம் என்பன இதன்போது பரிசீலிக்கப்படவுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கடற்றொழில்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம் ஆகியோர் பாராளுமன்ற பேரவையில் அங்கம் வகிக்கின்றனர்.
பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அதன் செயலாளராக பதவி வகிக்கிறார்.
Comments (0)
Facebook Comments (0)