கொவிட் -19 தொற்றை தடுப்பதற்கு ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பு
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு வழங்குவதற்கு ஏற்ற வகையிலான ஆயுர்வேத மருந்துகளை தயாரிக்கும் பணியில் சுதேச மருத்துவ ஊக்குவிப்பு, கிராமப்புற, ஆயுர்வேத மருத்துவமனைகள் மேம்பாடு மற்றும் சமூக ஆரோக்கியம் இராஜாங்க அமைச்சு ஈடுபட்டுள்ளதாக அதற்கு பொறுப்பான அமைச்சர் சிசிர ஜயகொடி இன்று (09) வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
இந்த நோய்த் தொற்றுக்குள்ளாவர்களுக்கு வழங்குவதற்கான நோய் எதிர்ப்பு பானம் மற்றும் மருந்துக் குளிகள் ஆகியவற்றை ஆயுர்வேத திணைக்களம் மற்றும் ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனம் ஆகியன இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
இந்த மருந்துகள் அனைத்தும் நூறு சதவீதம் உள்ளூர் மூலிகைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன என்றும் அவை ‘சதங்கா’ பானம் மற்றும் ‘சுவதரணி’ நோயெதிர்ப்பு பானம் என பெயரிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்த மருந்துகள் எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தவுள்ள நிலையில் இன்று பாராளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு குறித்த மருந்துகள் தொடர்பான அறிமுகம் இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயகொடியினால் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், மேற்கத்திய மருத்துவத்தினால் இதுவரையிலும் கொவிட் -19 வைரஸ் தொற்றை குணப்படுத்த முடியவில்லைஇ எனவே மேற்கத்திய மருத்துவம் இன்று கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளது என்றும் இதன்போது அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், இந்த சவாலை எதிர்கொள்ளக்கூடிய மருந்துகளை ஆயுர்வேத அமைச்சினால் தயாரிக்க முடிந்ததுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
Comments (0)
Facebook Comments (0)