பாராளுமன்ற பணியாளர்கள் எவருக்கும் கொவிட் தொற்று ஏற்படவில்லை
பாராளுமன்ற பணியாளர் ஒருவரின் குடும்ப உறுப்பினருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டிருப்பதாக பல்வேறு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டிருக்கும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்தது.
பாராளுமன்றத்தின் இன்றைய அமர்வின் போது காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா எழுப்பிய கேள்விக்கு சபாநாயகர் வழங்கிய பதில் இந்த செய்திக்கு அடிப்படையாக காணப்படுகின்றது.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் உள்ள பாராளுமன்ற விவகார பிரிவின் பணியாளர் ஒருவரின் குடும்ப உறுப்பினருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்டுள்ளதால் நேற்றைய தினம் குறித்த அலுவலகத்துக்குள் பிரவேசிப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏனையவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இங்கு சுட்டிக்காட்டினார்.
இதனால் பாராளுமன்ற பணியாளர் ஒருவரின் குடும்ப உறுப்பினருக்கு கொவிட் 19 வைரஸ் ஏற்பட்டிருப்பதாக வெளியிடப்பட்டிருக்கும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டது.
Comments (0)
Facebook Comments (0)