கொவிட் - 19 மரணம்; கிழக்கில் ஐந்தாக அதிகரிப்பு
கொவிட் - 19 நோய் தொற்றுக்குள்ளான நபரொருவர் இன்று (26) சனிக்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
காத்தான்குடியினைச் சேர்ந்த 62 வயதான குறித்த ஏற்கனவே சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று கொவிட் - 19 தொற்றுக்குள்ளாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். இதனையடுத்து கொவிட் - 19 தொற்றுக் காரணமாக இதுவரை ஐந்து பேர் கிழக்கு மாகாணத்தில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1. சம்மாந்துறையைச் சேர்ந்த நபர் - ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது மரணம்
2. ஒலுவிலைச் சேர்ந்த 63 வயதான நபர் - ஐ.டி.எச். வைத்தியசாலையில் மரணம்
3. சாய்ந்தமருதினைச் சேர்ந்த 63 வயது நபர் - நீரழிவு நோய் - கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் மரணம்
4. அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 54 வயது ஆண் - மாரடைப்பு - அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணம்
5. காத்தான்குடியினைச் சேர்ந்த 62 வயதான ஆண் - சிறுநீரக நோய் - மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணம்
Comments (0)
Facebook Comments (0)