சகல கூட்டு வணக்க வழிபாடுகளும் இடைநிறுத்தம்: சுகாதார அமைச்சு
சகல கூட்டு வணக்க வழிபாடுகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அசேல குணவர்தன தெரிவித்தார்.
அத்துடன் மதஸ்தலங்களிலும் உச்சமட்டம் 25 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் தொடரும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறினார்.
கொவிட் 10 வைரஸ் பரவல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை அவர் இன்று (29) வியாழக்கிழமை வெளியிட்டுள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை வெளியாவதற்கு முன்னரே சகல பள்ளிவாயல்களிலும் தராவீஹ், ஜூம்ஆத் தொழுகை மற்றும் பயான்கள், கியாமுல்லைல், இஃதிகாப், தவ்பா போன்ற அனைத்து கூட்டுச் செயற்பாடுகளையும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு முஸ்லிம் சமய பண்பாட்டல்கள் திணைக்களம் அறிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Comments (0)
Facebook Comments (0)