லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்திற்கு நிறைவேற்றுப் பணிப்பாளர் நியமனம்
லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாயக் கற்கைகள் நிறுவகத்தின் புதிய நிறைவேற்றுப் பணிப்பாளராக தூதுவர் தயந்த லக்சிரி மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு அமைச்சர் என்ற பதவி வழி அடிப்படையில் இந்த நிறுவகத்தின் தலைவரான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸினால் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்து, புதிய நிறைவேற்றுப் பணிப்பாளர் நேற்று புதன்கிழமை (15) கொழும்பில் உள்ள நிறுவக வளாகத்தில் வைத்து தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
சபை உறுப்பினர்களான திருமதி. சுகந்தி கதிர்காமர் மற்றும் கோசல விக்கிரமநாயக்கஇ பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திரப் பயிற்சி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் தூதுவர் பமீலா டீன், லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாயக் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் சேனாநாயக்க மற்றும் வெளிநாட்டு அமைச்சரின் அலுவலகத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Comments (0)
Facebook Comments (0)