“கொரோனா” - ஒரு நோய் அல்ல...

“கொரோனா” - ஒரு நோய் அல்ல...

கொரோனா தொற்றாளராக அடையாளப்படுத்தப்பட்டு கடந்த 14 நாட்களாக கறடியனாறு வைத்தியசாலையில் நான் பெற்றுக்கொண்ட அனுபவங்களை முகநூல் ஊடாக உங்களோடு பகிர்ந்து வருகிறேன்...

என்னுடைய அவதானத்தில் எங்களுடைய பிரதேசங்களில் தற்போது அடையாளம் காணப்படும் “கொரோனா” ஒரு நோயே அல்ல... ஒரு பயங்கரவாதியை கைது செய்து எந்த தடயங்களும் இன்றி, விசாரணையின்றி சிறைக்குள் அடைப்ப துபோலவே கோவிட் தொற்றாளர்களை “இயந்திரங்கள்” காட்டும் முடிவுகளை மட்டும் வைத்து தனிமைப்படுத்துகிறார்கள்.

இங்கு இருக்கும் அனைவரும் எந்த விதமான நோய் அறிகுறிகளும் இல்லாமல் மிகவும் உற்சாகமாக,  தேகாரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். எங்களுக்கெல்லாம் சொல்லப்பட்ட கொறோனா நோயின் அறிகுறிகளான

- காய்ச்சல்
- தடுமல்
- தலைவலி
- உடல் வலி
- தொண்டை வலி
- சுவாசிப்பதில் சிரமம்
- இருமல்...

போன்ற எந்தவிதமான நோய் அறிகுறிகளும் இதுவரையில் யாருக்கும் இங்கு ஏற்படவில்லை. இங்கு சகல வயதுடையவர்களும் இருக்கிறார்கள். சாதாரணமாகவே எல்லோரும் இருக்கிறார்கள். ஆனால் நீண்ட காலமாக தொற்றா நோயினால்

- கென்சர்
- இதய நோய்
- கிட்னி பாதிப்பு
- நீண்ட கால நீரிழிவு
- உயர் குருதியமுக்கம்
- ஆஸ்த்துமா   etc...

போன்ற (Chronic diseases) ஆல் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு கொறோனா தொற்று ஏற்படுகின்ற போது அது அவருக்கு சில சிக்கலான நிலமைகளை தோற்றுவிக்கலாம். ஏனெனில் கொரோனாவினால் மரணிக்கின்றவர்களை அவதானித்தால் பெரும்பாலும் அவர்களுக்கு ஏதாவது நீண்ட கால தொற்றா நோய்கள் இருந்திருக்கும்.

ஏனெனில் இலங்கையில் இதுவரை தொற்றுக்குள்ளானவர்கள் என இனங்காணப்பட்டவர்கள் 55,000. அதில் 85% தனிமைப்படுத்தலின் பின் வீடு சென்றுள்ளார்கள்.

நாளாந்தம் சாராசரியாக 600 பேர் இனங்காணப்படுகிறார்கள். இதுவரை 277 பேர் மரணித்திருக்கிறார்கள் இது 0.5% ஆகும். அதிலும் 70 வயதிற்க்கு மேற்பட்டவர்கள் 85%. அனேகமான மரணித்தவர்களுக்கு மரணத்திற்க்கு பின் தான் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை பொறுத்தமட்டில் கொரனாவிலும் கொடியது “டெங்கு” அது ஏற்படுத்தும் தாக்கத்துடன் அல்லது பொதுவான வைரஸ் நோய்களோடு ஒப்பிடும் போது கொரோனா என்பது பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டிய ஒரு நோயே அல்ல...

கொரோனா நோயின் தாக்கம் என்பது எங்களை விட்டு எப்போது அகலும் என்பது யாருக்கும் தெரியாது. இனிமேல் எதிர்காலத்தில் எங்களுடைய வாழ்க்கை முறை “Living with COVID / கொரோனாவோடு வாழப் பழகுதல்” என்கின்ற நடைமுறையிலேயே காணப்படும் என்பது நிதர்சனமாக விளங்குகிறது.

என்னுடைய  பிரதேசமான காத்தான்குடி தொடர்ச்சியாக 20 நாட்களாக முடக்கப்பட்டுள்ள நிலையில் எங்களுடைய பொருளாதாரம், கல்வி நடவடிக்கைகள், வெளித்தொடர்புகள், அன்றாட செயற்பாடுகள் என்று அனைத்தும் முடங்கியுள்ளது.

அதேநேரம் இன்னும் தொடர்ச்சியான Antigen / PCR பரிசோதனைகள் எங்களுடைய பிரதேசத்தை மையப்படுத்தி மேற்கொள்ளப்படுகிறது. 100 பேருக்கு எழுமாறியாக பரிசோதிக்கப்படும் போது அதில் 5 பேருக்கு தொற்று இருப்பது தவிர்க்கமுடியாதது.

ஏனெனில் கொரோனா என்பது சமூகத்திற்குள் ஊடுருவியிருக்கிறது. ஆனால் துரதிஸ்டம் எங்களுடைய பிரதேசம் மிக திட்டமிட்ட முறையில் நிருவாகப் பயங்கரவாதத்திற்குள் அகப்பட்டு கிழக்கு மாகாணத்திலேயே அதி அபாய வலயமாக சித்தரிக்கப்பட்டு சிகப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

உண்மையில் எங்களுடைய பிரதேசத்தை விட மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பல இடங்கள் உண்டு, ஆனால் அவற்றை அடையாளப்படுத்துவதற்கான ஆர்வமும், தேவைப்பாடும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இதுவரை ஏற்படாதது துரதிஸ்டமாகும்.

இதன் வெளிப்பாடுதான் தனிமைப்படுத்தல் ஊரடங்கை தளர்த்துவதில் நாம் எதிர்னோக்கும் சவால்கள். இவ்வாறான சவால்களை எதிர்காலத்தில் நாம் வெற்றிகரமாக முகம்கொடுக்க வேண்டுமாக இருந்தால்

- எங்களுடைய சமூகம் கல்வி ரீதியாக எழுச்சியடைய வேண்டும். ஒரு சமூகத்தின் எழுச்சியும், வீழச்சியும் கல்வி அடைவுகளில் தான் தங்கியுள்ளது.

- அத்தோடு பலமான அரசியல் அதிகாரம் எங்கள் கைகளில் இருக்க வேண்டும். சந்தர்ப்ப சூழ்னிலைகளை விளங்கி மிகச் சரியான தீர்மானங்களை சரியான நேரத்தில் எடுக்கவேண்டும்.

- எங்களுடைய பொருளாதாரங்கள் நவீன மயப்படுத்தப்பட்டு ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.

அதே நேரம் தொற்றாளர்களாக ஒருவர் அடையாளப்படுத்தப்பட்டால் குறித்த தொற்றாளர் தொடர்பான சமூகத்தின்  எதிர்மறையான பார்வை, பெற்றோர், மனைவி, பிள்ளைகள், குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்படும் அச்சம் சமூகத்திலிருந்து களையப்பட வேண்டும்.

ஏனெனில் இன்று நாம் காணும் “கொரோனா” ஒரு நோயே அல்ல. இங்கிருப்பவர்களுக்கு

Vit C
Zinc sulphate
Thyamine

இந்த 3 மாத்திரைகளைத் தவிர வேறு எதுவும் வழங்கப்படுவதுமில்லை, எந்த வைத்தியரும் பார்வையிடுவதுமில்லை. மேற்படி 3 மாத்திரைகளும் கொரோனாவுக்கான மாத்திரையுமல்ல.

இதை என்னுடைய 14 நாள் தனிமைப்படுத்தல் அனுபவத்திலிருந்து எழுதுகின்றேன். ஏனெனில், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் எங்களை அறியாமலே நாங்கள் கொரோனா தொற்றாளர்களாக இருப்போம், அதனை பரிசோதிக்கும் போதுதான் “நானும் கொரோனா நோயினால்” பாதிக்கப்பட்டுள்ளேன் என்பது தெரியவரும்.

அதுவரை எங்களோடு ஒன்றாக இருந்த பிள்ளைகள், மனைவி, நண்பர்கள், அயலவர்கள் , எங்களை சுற்றியுள்ள சமூகம் என்று அனைவரும் , தொற்றாளராக நாங்கள் அடையாளப்படுத்தப்பட்ட பிறகு எங்களை வித்தியாசமான பார்வையோடு பார்க்கின்ற , அருகில் வர அச்சப்படுகின்ற சூழ்னிலை காணப்படுகிறது.

இது தான் நாங்கள் அனுபவிக்கும் கஸ்டமான தருனம். ஏனெனில் எங்களுக்கு காட்டப்பட்டுள்ள , எங்களுக்கு சொல்லப்பட்டுள்ள கொறோனா ஆபத்தானது, அபாயகரமானது.

ஆனால் உண்மையில் இன்று நாம் அனுபவிக்கும் கொறோனா என்பது வெறும் போலியானது. ஏனெனில் இது ஒரு நோயே அல்ல. கொரோனா தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டவர்கள் தொடர்பாக யாரும் கவலை அடையாதீர்கள்...

ஏனெனில் இவர்கள் பாக்கியசாலிகள்...

ஏ.ஜி.எம். சாமில்