ஜும்ஆ தொழுகைக்கு 50 பேர் மட்டுமே அனுமதி

ஜும்ஆ தொழுகைக்கு 50 பேர் மட்டுமே அனுமதி

ஜும்ஆ தொழுகைக்கு 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன அறிவித்துள்ளன.

பள்ளிவாயல்களில் பேணப்பட வேண்டிய அவசர கொவிட்- 19  கட்டுப்பாடுகள் II

06.10.2020 திகதியிடப்பட்ட DGHS/ COVID- 19/2020- 347 இலக்க சுகாதார அமைச்சின் சுற்று நிரூபம் மற்றும் கால வரையரைகளையொட்டி, இலங்கை வக்பு சபை பின்வறுமாறு தீர்மாணிித்துள்ளது:

1). எந்தவொரு குறித்த நேரத்திலும் 100 நபர்களுக்கு மேல் தொழக்கூடிய பள்ளிவாயல்களில் 50 நபர்கள் என்ற உச்ச வரம்புக்கு உட்பட்டவாறு ஐநேரத் தொழுகைகளையும் ஜும்மா தொழுகையையும் மாத்திரம் அனுமதித்தல்

2).100 பேர்களை விட குறைந்த தொகையினர் தொழக்கூடிய பள்ளிவாயல்களில் அத்தொகையில் 50% ஐ மாத்திரமே அனுமதித்தல்

3). 50 பேர் அல்லது அதனை விடக் குறைந்த தொகையினரை எவ்வாறு தெரிவு செய்வது என்பதை ஜமாஅத்தாருக்கு முன்கூட்டியே அறிவித்தல்

4). பள்ளிவாயலில் நுழையும் போது ஆட்களை அடையாளம் காணத் தேவையான விபரங்களைப் பதிவு செய்தல், கைகழுவுதல், எல்லா நேரங்களிலும் முகமறைப்பு அணிதல், ஒரு மீடர் இடைவெளி பேணல், சொந்த முஸல்லாவில் தொழுதல் உட்பட ஏனைய அனைத்து சுகாதார, மற்றும் காவல் துறையினரது வரையறைகள் கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டல்கள் கண்டிப்பாக பேணப்படல்

5). மறு அறிவித்தல் வரை மேற்குறித்த செயற்பாடுகள் தவிர்ந்த ஏனைய அனைத்து நடவடிக்கைகள / ஒன்றுகூடல்கள் இடைநிறுத்தப்படல்.

6). மறு அறிவித்தல் வரை வரையறுக்கப்பட்ட பகுதிகளாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பள்ளிவாயல்கள் தற்காலிகமாக மூடப்படல்

மேலுள்ள 1, 2, 3, 4 ஆகிய வரையரைகளைப் பேணுவது சிரமம் அல்லது முடியாது எனக் கருதுகின்ற பள்ளிவாயல் நம்பிக்கையாளர்கள் / பொறுப்புதாரிகள் ஐநேரத் தொழுகை மற்றும் ஜும்ஆ தொழுகை நடாத்துவதை தவிர்த்தக் கொள்ள முடியும்.

மேற்குறித்த பணிப்புரைகளை கண்டிப்பாக நிறைவேற்றத் தவறும் நம்பிக்கையாளர்கள் அல்லது பொறுப்புதாரிகளுக்கு எதிராக வக்பு சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டம் ஆகியவற்றின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இலங்கை வக்பு சபையின் பணிப்புரைக்கேற்ப,

ஏ.பீ. எம். அஷ்ரப்
பணிபாளர்
வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்