அனைத்து இன மக்களும் அச்சம், சந்தேகமின்றி வாழ மொட்டுக்கு வாக்களியுங்கள்: மஹிந்த
அனைத்து இன மக்களும் பயம் சந்தேகமின்றி வாழ கூடிய உரிமையை பெற்றுக்கொடுப்பதற்காக மூன்றில் இரண்டு அதிகாரம் பெறுவதற்கு தாமரை மொட்டிற்கு வாக்களிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கண்டி, பாததும்பர பிரதேசத்தில் நேற்று (21) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
"நாட்டிற்கு பொருத்தமான அரசியலமைப்பில் அனைத்து இன மக்களும் ஒன்றாக வாழக்கூடிய நாட்டை உருவாக்க கூடிய வாய்ப்பு ஏற்படும். இம்முறை பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு அதிகாரம் பெறுவதற்கான சக்தி கொண்ட ஒரே கட்சி மொட்டு கட்சியாகும்.
இதுவரையில் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த அதிகமானோர் மொட்டு கட்சியுடன் இணைந்துள்ளனர். ஆர்.பிரேமதாஸ யுகத்திற்கு மீண்டும் பயணிப்பதற்கு இலங்கை மக்களுக்கு எவ்வித அவசியமும் இல்லை.
88, 89ஆம் ஆண்டு கலவரம் போன்ற யுகம் ஒன்று இந்த நாட்டு மக்களுக்கு மீண்டும் அவசியமில்லை. கொரோனா தொற்றினை தோல்வியடைய செய்யும் நோக்கில் நிதி சட்டமூலம் கொண்டுவர முயற்சித்த போது சஜித் பிரேமதாஸ அந்த நிதி சட்டத்தை தோல்வியடைய செய்வதாக அறிவித்ததன் மூலம் அவரது முதிர்ச்சியற்ற அரசியல் பார்வையே உள்ளதென்பது தெளிவாகியுள்ளது.
அவ்வாறான பார்வையற்ற நபர் ஒருவர் நாட்டை ஆட்சி செய்வதற்குட்படுத்துவதற்கு பதிலாக நாட்டை கட்டியெழுப்பும் திட்டம் கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாக்களிக்க அனைத்து இனத்தவரும் கட்டியெழுப்ப கூடிய நாட்டினை உருவாக்குவதற்காக தங்கள் பொன்னான வாக்கினை பயன்படுத்தவும்" என்றார்.
Comments (0)
Facebook Comments (0)