முப்படையுடனான கலந்துரையாடலை மேற்கொண்ட, இந்திய உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர்
இலங்கை கடற்படை கிழக்கு தளபதி, இலங்கை இராணுவத்தின் 22ஆவது பிரிவின் கட்டளை அதிகாரி, சீனன் குடாவிலுள்ள இலங்கை விமானப் படை அக்கடமியின் தலைமை அதிகாரி மற்றும் பாதுகாப்பு படைகளின் பிராந்திய கட்டளை தளபதி (கிழக்கு) ஆகியோரை முறையே 16,17 மற்றும் 20 ஒக்டோபர் 2020 ஆகிய திகதிகளில் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் விகாஸ் சூத் அவர்கள் சந்தித்திருந்தார்.
இந்த சந்திப்புக்களின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புசார் உறவினை மேலும் விஸ்தரித்தல் மற்றும் இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் முன்னெடுக்கப்படும் மக்களிடையிலான நெருக்கமான தொடர்பினை மேம்படுத்துவதனை மேலும் விஸ்தரிக்கும் முகமாக கிட்டத்தட்ட 50 சிறுவர்களுடனான சிறுவர் இல்லமான திருகோணமலை சிவாநந்த தபோவனத்துக்கு பாதுகாப்பு ஆலோசகர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
அவர்களுக்கான அன்பளிப்புக்கள் வழங்கப்பட்டிருந்த அதேசமயம் எவ்வாறான ஆதரவினை அவர்களுக்கு வழங்க முடியும் என்பது தொடர்பாகவும் இங்கு ஆலோசிக்கப்பட்டிருந்தது. கொவிட் 19 குறித்த கடுமையான வழிகாட்டல்கள் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றப்பட்ட நிலையில் இந்த விஜயம் அமைந்திருந்தது.
Comments (0)
Facebook Comments (0)