மஹிந்த ராஜபக்ஷ ஞாயிறுக்கிழமை பிரதமராக பதவியேற்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 9ஆம் திகதி ஞாயிறுக்கிழமை காலை 8.30 மணிக்கு களனி ரஜமஹா விகாரையில் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையிலேயே அவர் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார்.
கடந்த புதன்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, 145 ஆசனங்களை பெற்று பெரும்பான்மை பலத்தினை பெற்றுக்கொண்டது.
Comments (0)
Facebook Comments (0)