கொவிட்-19 தொடர்பான மருத்துவ உபகரணங்களை தாய்லாந்து இலங்கைக்கு அன்பளிப்பு
வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்ற நிகழ்வில் கொழும்பிலுள்ள ரோயல் தாய் தூதரகத்தின் பொறுப்பாளரான தயாடத் கஞ்சனாபிபட்குலிடம் இருந்து வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே மருத்துவ உபகரணங்களை நன்கொடையாகப் பெற்றுக் கொண்டார்.
நாடு முழுவதும் உள்ள கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்படும் பொருட்டு, குறித்த நன்கொடை உற்பத்திஇ வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சின் செயலாளர் கலாநிதி. ஆர்.எம்.எஸ்.கே. ரத்நாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.
30 ஒட்சிசன் செறிவூட்டிகள், 02 வென்டிலேட்டர்கள், 108 ஒட்சிசன் தாங்கிகள், 62 ரெகுலேட்டர்கள்/கேனுலே செட்டுகள், 160 பல்ஸ் ஒக்சிமீட்டர்கள் மற்றும் 150 தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவை இந்த நன்கொடையில் உள்ளடங்கும்.
இந்த நன்கொடையானது, தாய்லாந்தின் வெளிநாட்டு உறவுகள் அமைச்சு, சொம்டெட் ஃப்ரா நயனசம்வர இந்த நன்கொடையில் ஃப்ரா சங்கராஜ் வட், போவோரனிவ்ஸ் விகாரை அறக்கட்டளை, தாய்லாந்தின் இலங்கை சங்கம், தாய் - இலங்கை வர்த்தக சபை மற்றும் கொழும்பில் உள்ள ரோயல் தாய் தூதரகம் ஆகியவற்றின் பங்களிப்புக்களை உள்ளடக்கியுள்ளது.
Comments (0)
Facebook Comments (0)