மனித உரிமை பேரவையில் பங்களாதேஷ் இலங்கைக்கு ஆதரவளிக்கும்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேணை தொடர்பான வாக்களிப்பின் போது பங்களாதேஷ் இலங்கைக்கு ஆதரவளிக்கும் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த வாக்கெடுப்பு எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையிலேயே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை பங்களாதேஷ் செல்லவுள்ளார்.
பங்களாதேஷின் 50ஆவது சுதந்திர தின நிகழ்வில் பங்குபற்றுவதற்காகவே பிரதமர் அங்கு செல்கின்றார்.
இந்த சந்தர்ப்பத்தில் அவர், பங்களாதேஷ் பிரதமர் ஷேய்க் ஹசீனாவினை சந்திக்கவுள்ளதுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு கோரிக்கை விடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-சன்டே டைம்ஸ்-
Comments (0)
Facebook Comments (0)