சட்டத்தரணிகள் சங்க தலைவராக சாலிய பீரிஸ் தெரிவு
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 26ஆவது தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவரை தெரிவுசெய்வதற்கான தேர்தல் இன்று (24) புதன்கிழமை நாடளாவிய ரீதியில் இடம்பெற்றது.
இந்த தேர்தலில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் 5,162 வாக்குகளையும் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி குவேர டி சொய்ஸர் 2,807 வாக்குகளையும் பெற்றுக்கொண்டார்.
இதனையடுத்து 2,355 வாக்குகள் வித்தியாசத்தில் புதிய தலைவராக சாலிய பீரிஸ் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், 2015ஆம் ஆண்டு தொடக்கம் 2017 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதித் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.
Comments (0)
Facebook Comments (0)