ஒரு இலட்சத்துக்கும் அதிகமான Pfizer தடுப்பூசிகள் அமெரிக்காவினால் இலங்கைக்கு அன்பளிப்பு

ஒரு இலட்சத்துக்கும் அதிகமான Pfizer தடுப்பூசிகள்  அமெரிக்காவினால் இலங்கைக்கு அன்பளிப்பு

ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட Pfizer-BioNTech கொவிட்-19 தடுப்பூசிகளை ஐக்கிய அமெரிக்கா இன்று (28) சனிக்கிழமை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியது.

COVAX ஊடாக வழங்கப்படும் இந்த தடுப்பூசிகளானது உயிர்களை காக்க உதவும் என்பதுடன், இந்த பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டு வருவதற்கு மிகவும் அத்தியவசியமான கொவிட்-19 தடுப்பூசியேற்ற செயலெல்லையை இலங்கையில் அதிகரிக்கவும் உதவும்.

"இந்த பெருந்தொற்று தொடர்கின்றது மற்றும் புதிய திரிபுகள் வெளிப்படுகின்றன என்ற வகையில், முடிந்த வரை அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு முடிந்தளவு விரைவாக தப்பூசியேற்றுவதற்கு நாம் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டியது முக்கியமாகும்" என்று இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸ் தெரிவித்தார்.

அமெரிக்காவின் உணவு மற்றும் ஒளடத நிர்வாகத்தினால் அனுமதிக்கப்பட்ட Pfizer-BioNTech  தடுப்பூசிகளின் இந்த நன்கொடையானது இலவசமாக கிடைப்பதுடன், இலங்கை மக்களின் ஆரோக்கியம் மற்றும் செழிப்புக்கான அமெரிக்காவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டையும் இது பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றும் அவர்
குறிப்பிட்டார்.

கடந்தஜூலை மாதம் 16 ஆம் திகதி அமெரிக்காவினால் இலங்கைக்கு நன்கொடையளிக்கப்பட்ட 1.5 மில்லியனுக்கும் அதிகமான மொடர்னா தடுப்பூசி மருந்தளவுகளுக்கு மேலதிகமாகவே தற்போது இந்த தடுப்பூசி விநியோகம் மேற்கொள்ளப்படுகிறது.

உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளுக்கு பாதுகாப்பான, செயற்திறனுடைய, மற்றும் உயர் தரமான தடுப்பூசிகள் கிடைப்பதன் நிமித்தமான ஆராய்ச்சி, உருவாக்கம், மற்றும் விநியோகத்தை துரிதப்படுத்தும் சர்வதேச முன்னெடுப்பொன்றான COVAX ஸ்தாபனத்திற்கு பொது சுகாதார உதவிகளில் உலகளவில் முன்னிலை வகிக்கும் நாடென்ற என்ற வகையில் அமெரிக்கா 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

COVAX ஏற்கனவே 138 நாடுகளுக்கு 209 மில்லியன் தடுப்பூசிகளை விநியோகம் செய்துள்ளது. அந்த ஸ்தாபனத்தின் மிகப் பெரிய ஒற்றை பங்களிப்பாளராக அமெரிக்க இருக்கிறது.

200 செயற்கை சுவாசக்கருவிகள் (ventilator) உட்பட 15 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான அவசர பொருள் விநியோகங்கள் மற்றும் முக்கியமான சேவைகளை வழங்கி, இந்த பெருந்தொற்று ஆரம்பித்த காலப்பகுதியில் இருந்தே அமெரிக்கா இலங்கை சுகாதார அமைச்சுடன் பங்காண்மையுடன் செயற்பட்டு வருகிறது.

கொவிட்-19 தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கும், இலங்கை மக்களின் அவசர சுகாதார தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், இந்த பெருந்தொற்றின் எதிர்மறை பொருளாதார தாக்கங்களை தணிப்பதற்கும் இந்த உதவிகளானது இலங்கையின் 25 மாவட்டங்களிலும் 9 மாகாணங்களிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை சென்றடைந்துள்ளன.

உலகளாவிய நெருக்கடியை எதிர்கொள்வதில் எந்தவொரு நாடும் தனித்து செயற்பட முடியாது. இந்த பெருந்தொற்றுக்கான சர்வதேச பதிலளிப்பில் அமெரிக்க முன்னிலை வகிக்கிறது.

இது நாம் உயிர்களை காப்பதிலும் மற்றும் உலக பொருளாதாரத்தை மீள ஆரம்பிப்பதிலும் உறுதிப்பாட்டுடன் இருக்கிறோம் என்பதனால் மட்டுமல்ல, இதுவே செய்வதற்கு சரியான விடயம் என்பதனால் ஆகும். கொவிட்-19 ஐ எதிர்த்து போராடுவதன் நிமித்தம் இலங்கை சுகாதார அமைச்சு, ஐ.நா. சிறுவர் நிதியம் (UNICEF), மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) ஆகியவற்றுடனான எமது உறுதியான பங்காண்மையை தொடர்வதற்கு நாம் எதிர்பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கது