வர்த்தக வாணிப சம்மேளனம் - சுற்றுலா கைத்தொழில் மன்றம் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து
இலங்கை வர்த்தக வாணிப சம்மேளனத்திற்கும் சுற்றுலா கைத்தொழில் மன்றத்திற்கும் இடையிலான உறவினை வலுப்படுத்தும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று அண்மையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சம்மேளனத்தின் தலைவர் கீர்த்தி குணவர்தனவும், சுற்றுலா கைத்தொழில் மன்ற தலைவர் ஏ.எம். ஜௌபரும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் ரஸ்அல்கய்மா வர்த்தகக் கண்காட்சி எதிர்வரும் ஜுலை 28ம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 6ஆம் திகதி வரை தொடர்ச்சியாக 10 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் முயற்சியினால் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ரஸ்அல்கய்மா வர்த்தக வானிப சம்மேளத்துடன் இணைந்து இந்நிகழ்வை நடாத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இக்கண்காட்சியை திறம்பட ஏற்பாடு செய்யும் நோக்கிலேயே இலங்கை வர்த்தக வாணிப சம்மேளனத்திற்கும் சுற்றுலா கைத்தொழில் மன்றத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் சுற்றுலா சம்மேளனத்தின் சிரேஸ்ட ஆலோசகர் திஸ்ஸ ஜயவீர, முன்னாள் சுற்றுலா மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி, ரஜாப்தீன் என்ட் சன்ஸ் தலைவர் சபீக் ரஜாப்தீன், முன்னாள் சவூதி அரேபிய ஜித்தாவுக்கான கவுன்சிலர் ஜெனரலும் மத்திய கிழக்கு நாடுகாளுக்கான சுற்றுலா சம்மேளனத்தின் விசேட பிரதிநிதியுமான கலாநிதி எம். இனாமுல்லாஹ். சுற்றுலா சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் யூ.பி.எஸ். பத்திரண, வர்த்தக சம்மேளனத்தின் பதில் செயலாளர் நாயகம் திலான் எம். விஜேசூரிய, சுற்றுலா சம்மேளத்தின் தேசிய அமைப்பாளர் டொனால் ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கண்காட்சியின் மூலம் இலங்கையின் உற்பத்திகளை ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஊடாக சந்;தைப்படுத்தவதுடன் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அண்டை நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பை கட்டியொழுப்ப முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Comments (0)
Facebook Comments (0)