பூமியில் சமாதானம், கிறிஸ்மஸ் செய்தி?

பூமியில் சமாதானம், கிறிஸ்மஸ் செய்தி?

வினோத் மூனசிங்க

இரண்டாம் மிலேனியத்திற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் மதமாற்றம் செய்யப்பட்ட கிறிஸ்தவ பேரரசுகளின் விரிவாக்கத்துடன், கிறிஸ்தவம் உலக மதமாக மாறியது. கென்யாவின் ஜோமோ கென்யாட்டா கூறியது போல்,

"மிஷனரிகள் வந்தபோது, ஆபிரிக்கர்களிடம் நிலம் இருந்தது, மிஷனரிகளிடம் பைபிள் இருந்தது. கண்களை மூடிக்கொண்டு எவ்வாறு ஜெபிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார்கள். நாங்கள் கண்களைத் திறந்தபோது, அவர்களிடம் நிலம் இருந்தது, எங்களிடம் பைபிள் இருந்தது".

ஆக்கிரமித்த அமெரிக்காவால் இரண்டு தசாப்தங்களில் பௌத்த தென் கொரியாவை கிறிஸ்தவமயமாக்க முடிந்தது. மதம் மாறாத காலனிகளில், ஏகாதிபத்தியவாதிகள் சிறியளவான, சலுகை பெற்ற கிறிஸ்தவ சிறுபான்மையினரை நிறுவினர். கிறித்தவ மதத்துடன் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் பரவியது.

லூக் நற்செய்தியாளர் (லூக் 2:13-14) அறிவிக்கையில் (லூக் 2:13-14) இயேசுவின் பிறப்பில் தேவதூதர்கள் "பூமியில் சமாதானம், மனிதர்களுக்கு நன்மை" என்று பாடினர்.

எனவே, ஆரம்பத்திலிருந்தே, கிறிஸ்மஸுடன் சமாதானத்தின் செய்தி இருந்தது. 13 ஆம் நூற்றாண்டில், ஸ்வீடிஷ் பிரபு பிர்கர் ஜார்ல் வருடாந்த "கிறிஸ்மஸ் சமாதானத்திற்கு" உத்தரவிட்டதுடன், இது பின்லாந்தில் இன்றுவரை தொடர்கிறது.

முதல் உலகப் போரின் முதல் கிறிஸ்மஸான 1914 இல், பல்வேறு தரப்பு வீரர்கள் தன்னியல்பான, அதிகாரப்பூர்வமற்ற போர்நிறுத்தத்தில் ஒன்றுகூடி, பொதுவான இடத்தில் கொண்டாடியதுடன், கரோல்களைப் பாடி கால்பந்து விளையாடினர்.

சீன குணாதிசயங்களுடன் கிறிஸ்மஸ்

கிறிஸ்தவம் முதலாவது மிலேனியத்தில் சீனாவை அடைந்தது, ஆனால் முதல் ஓபியம் போர் "அவமானத்தின் நூற்றாண்டு" தொடங்கிய பின்னரே வேகமாக வளர்ந்தது. கிறிஸ்மஸ் ஐரோப்பிய மிஷனரிகளுடன் உள்துறைக்குள் நுழைந்தது.

அப்போதிருந்து, கிறிஸ்தவ எதிர்ப்பு பிரச்சாரங்கள் தோன்றியதுடன், மிகவும் சக்திவாய்ந்த Righteous and Harmonium Fists  இயக்கம் ("Boxers ") உருவானது.

இருப்பினும், ஒரு கிறிஸ்தவரான சன் யாட்சன், 1911 ஆம் ஆண்டு குயிங் வம்சத்திற்கு எதிராக புரட்சிகர இயக்கத்தை வழிநடத்தினார், மேலும் சீன கம்யூனிஸ்ட் கட்சி (CPC) கிறிஸ்மஸுக்கு சாதகமாக கிறிஸ்தவத்தை பொறுத்துக்கொண்டது.

1946ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் ஈவ் அன்று, குடிபோதையில் இருந்த இரண்டு அமெரிக்க கடற்படையினர் ஷென் சோங் என்ற இளம் பெய்ஜிங் பல்கலைக்கழக மாணவியை கற்பழித்தனர்.

குற்றத்தை மறைப்பதிலும், கற்பழிப்பாளர்களை விடுவிப்பதிலும் அதிகாரிகள் அமெரிக்க இராணுவத்துடன் கூட்டுச் சேர்ந்தனர். அதன் பிறகு "ஏகாதிபத்தியவாதிகளா" அல்லது "ஏகாதிபத்தியவாதி அல்லாதவர்களா" விழாவை நடத்தினார்கள் என்பதைப் பொறுத்து, கிறிஸ்மஸ் பற்றிய CPC இனுடைய அணுகுமுறை மாறியது.

ஆயினும்கூட, CPC கிறிஸ்மஸ் பண்டிகையை சமாதானம், ஒற்றுமை மற்றும் ஒன்றிணைவின் பருவமாக கருதியது. 1949 இல் சீனாவின் விடுதலைக்குப் பிறகு, ஜோசப் ஸ்டாலினுடைய 70 வது பிறந்தநாளில், CPC ஊடகங்கள் சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினை நத்தார் தாத்தாவிற்கு ஒப்பிட்டன.

கொரியப் போரின்போது, பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க போர்க் கைதிகளுக்காக சீன வீரர்கள் கிறிஸ்மஸ் பண்டிகைகளை தயார் செய்தனர். கலாச்சாரப் புரட்சியானது கிறிஸ்மஸ் பற்றிய உத்தியோகபூர்வ அணுகுமுறையை கடினமாக்கியது, ஆனால் 1978 க்குப் பிந்திய சீர்திருத்தங்களுடன் மீண்டும் மென்மையாக்கப்பட்டது. கிறிஸ்மஸ் எதிர்ப்பு உணர்வு வெடித்துள்ளது, ஆனால் உத்தியோகபூர்வ அனுமதியுடன் அல்ல.

இன்று, சுமார் 4% சீனர்கள் கிறிஸ்தவர்களாவர், ஆனால் கிறிஸ்மஸ் பரந்த மக்களால் கொண்டாடப்படுகிறது, ஜப்பானில் உள்ளதைப்போல குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான காதலர் தினமாக அதன் கிறிஸ்தவ வேர்களிலிருந்து தன்னைப் பிரித்துள்ளது. ஜனாதிபதி ஜி ஜின்பிங் கூட பின்லாந்தில் "சாண்டா கிளாஸ்" க்கு விஜயம் செய்தார்.

முக்கிய பண்டிகைகள் கிறிஸ்மஸ் ஈவ் அன்று இடம்பெறுவதுடன், அவை வீதி அலங்காரங்கள், உணவு மற்றும் பரிசு வழங்குதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டதுடன், குறிப்பாக ஆப்பிள்களில், " píngguǒ " (ஆப்பிள்) இல் உள்ள " píng" "அமைதிக்காக") போலவும், "Píng'ān Yè" இல் உள்ள " píng" ("அமைதியான மாலை" - அதாவது, கிறிஸ்மஸ் ஈவ்) போலவும் உள்ளது.

பெத்லகேமில் கிறிஸ்மஸ்

பைபிள் (மேத்தியு 2:1) கூறுகையில் "... இயேசு யூதேயாவின் பெத்லகேமில் பிறந்தார்..." எனவே, கிறிஸ்தவர்களுக்கு, இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய இடது கரையில் உள்ள நகரத்தில், கிறிஸ்மஸ் என்பது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

உண்மையில், அனைத்து பாலஸ்தீனியர்களுக்கும் (அவர்களில் 2% மட்டுமே கிறிஸ்தவர்கள்), இயேசுவின் பிறப்பு பெருமைக்குரியது. கிறிஸ்மஸ் ஈவ் 2019 அன்று, ஒரு பாலஸ்தீனிய தலைவர் கிறிஸ்மஸ்ஸை  “முதல் பாலஸ்தீனியர் மற்றும் முதல் ஷாஹித்தான நம் ஆண்டவர் இயேசு மேசியாவின் பிறந்த நாள் [சாட்சி அல்லது தியாகி]" என்று அழைத்தார்.

கிறிஸ்மஸ் அன்று, பெத்லகேமில் வசிப்பவர்கள் தங்கள் தெருக்களை விளக்குகளால் அலங்கரித்து, கிறிஸ்மஸ் ஈவ் அன்று, தங்கள் நகர மையத்தின் வழியாக அணிவகுத்து, நேட்டிவிட்டி தேவாலயத்திற்கு முன்னால் உள்ள பெரிய கிறிஸ்மஸ் மரத்தை கடந்து செல்கிறார்கள், அங்கு ஆயிரக்கணக்கான பாலஸ்தீனிய மற்றும் வெளிநாட்டு கிறிஸ்தவர்கள் திரளாக ஒன்றுகூடுகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும், திருவருகைக் காலத்தையொட்டி, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் உள்ள சிறிய வடிசாலைகள் கிறிஸ்மஸுக்கு சாராயத்தின் (முஸ்லிம்களுக்குத் தடைசெய்யப்பட்டவை) விசேட தொகுதிகளைத் தயாரிக்கின்றன.

பல ஆண்டுகளாக, காசா பகுதியில் உள்ள ஜைனா கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்த முஸ்லீம் பெண்கள் கிறிஸ்மஸ் பரிசுகளை காசா மற்றும் பெத்லஹேமில் விற்பனை செய்வதற்கும் ஏற்றுமதி செய்வதற்குமாக கைவினைப்பொருளாக தயாரித்து வருகின்றனர்.

காஸாவின் 2 மில்லியன் மக்களில் 1,000 பேர் மட்டுமே கிறிஸ்தவர்களாவர். "எங்கள் தீர்க்கதரிசி எல்லா மதங்களையும் மதிக்கும்படி எங்களை ஊக்குவித்ததுடன், அவர்களின் திருநாளைக் கொண்டாடுவதில் அவர்களுடன் ஒன்றிணைய விரும்புகிறோம்" என்று ஜைனாவின் தயாரிப்பு வடிவமைப்பாளர் லைலா தாயே 2019 இல் ராய்ட்டர்ஸிடம் கூறினார்.

இருப்பினும், பெத்லகேமில் அமைதியான கொண்டாட்டங்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரிகளால் சிதைக்கப்படுகின்றன. இஸ்ரேலியர்கள் அருகாமையில் 22 சட்டவிரோத குடியிருப்புகளை (மேற்குக் கரையில் உள்ள 240 இல்) கட்டியுள்ளனர், அதே சமயம் சட்டவிரோத "இனவெறி சுவர்" மற்றும் சுமார் 30 வீதித் தடைகள் குடியிருப்பாளர்களின் அணுகலை கடுமையாகத் தடுக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் போலவே, இந்த ஆண்டும், இஸ்ரேலிய அதிகாரிகள் காசா பகுதியை முற்றுகையிட்டு, மூன்றில் ஒரு பங்கு விண்ணப்பதாரர்கள் தங்கள் உறவினர்களுடன் கிறிஸ்மஸிற்காக ஒன்று சேருவதற்கான உரிமையை தன்னிச்சையாக மறுத்துள்ளனர்.

மதச்சார்பின்மை

சீனா, ஜப்பான் மற்றும் பாலஸ்தீனத்தைப் போலவே, கிறிஸ்மஸ் உலகம் முழுவதும் மதச்சார்பற்றதாக மாறி வருகிறது. கிறிஸ்மஸின் மரபுகள் பல கிறிஸ்தவ பொறிகளைக் உதிர்த்துள்ளதுடன், சில சமயங்களில் உள்ளூர் பழக்கவழக்கங்களுடன் அல்லது பிறழ்வுகளுடன் கலக்கின்றன, சில சமயங்களில் மூல ஐரோப்பிய பேகன் பண்டிகையின் பழக்கவழக்கங்களுக்குத் திரும்புகின்றன.

இந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் இது வெளிப்படையாகத் தெரிவதுடன், அங்கு வணிகமயமாக்கல் பண்டிகையின் மத மற்றும் சமூக செயற்பாடுகளை மிகவும் பின்தங்கவைத்துள்ளது: அயன மண்டலம் ஆட்டிக் பிரதேச கிறிஸ்மஸை கொண்டாடினால், அலங்காரங்கள் ஓர் அந்நியமான புதுமையாக ஆச்சரியப்படுத்தக்கூடும்.

பெருநகர கிறிஸ்தவ தாய்நாடுகளில் கூட, இயேசு கிறிஸ்துவும் அவருடைய விசுவாசிகளும் சாண்டா கிளாஸ் மற்றும் அவரது கலைமான்களால் பின்தொடரப்பட்டிருந்தனர்.

சாண்டா கிளாஸின் நிறுவனம் (முதலில் செயின்ட் நிக்கோலஸ், குறிப்பிடத்தக்க வகையில் கலைமான் இல்லாத அனடோலியாவில் உள்ள கிரேக்க குடியேற்றவாதி) பரிசு வழங்கும் இந்தோ-ஐரோப்பிய மரபுகள் மற்றும் வொனானாஸ் (Óðin) போன்ற புராண உயிரினங்களிலிருந்து பெரிதும் ஈர்க்கப்பட்டது.

பிரிட்டன் இப்போது ஒரு சிறுபான்மை கிறிஸ்தவ நாடாக இருந்தாலும், தொடர்ந்து கிறிஸ்மஸ்ஸை கொண்டாடுகிறது. பாரம்பரிய பரிசு வழங்குதல், கிறிஸ்துமஸ் பாடல்கள், கிறிஸ்துமஸ் இரவு உணவு (மதிய உணவு) மற்றும் குடிப்பழக்கம் தவிர, இது கிறிஸ்மஸ் பாடல்களை வாங்குவதற்கும், ஒன்றாக கூடுவதற்கும், கிறிஸ்மஸ் படங்களை, பெரும்பாலும் “Love Actually” போன்ற நல்ல மனநிலையை தரும் திரைப்படங்கள் மட்டுமல்லாது, "Last Christmas" போன்ற சமூக-பொறுப்பு உள்ளடக்கம் கொண்ட திரைப்படங்ளையும் தொலைக்காட்சியில் பார்ப்பதற்கும் இது ஒரு சிறந்த நேரமாகும். 

உண்மையில், தொண்டு மற்றும் தன்னார்வ பணிக்கு கொடுப்பதும் (கடைசியாகக் குறிப்பிட்ட திரைப்படத்தை போல்) தொகுப்பின் ஒரு பகுதியாகும். எனவே, சமாதானத்தின் செய்தி உயிர்ப்பாக உள்ளது.

போர் மற்றும் சமாதானம்?

இருப்பினும், கிறிஸ்மஸ் ஒரு இருண்ட பக்கத்தையும் கொண்டுள்ளது. மதச்சார்பற்ற பிரான்ஸ் மதச்சார்பற்ற கிறிஸ்மஸ்ஸை கொண்டாடுகிறது. அரசாங்க கட்டிடங்கள் அலங்கரிக்கப்படலாம், ஆனால் கிறிஸ்தவ சின்னங்கள் எதுவும் வெளிக்காட்டப்படக்கூடாது.

தீவிர வலதுசாரி அரசியல்வாதிகள் இப்போது தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளூர் நிறுவனங்களில் யேசுபிறப்புக் காட்சிகளை வெளிப்படையாகக் காண்பிப்பதன் மூலம் அந்த மதச்சார்பின்மைக்கு சவால் விடுகின்றனர்.

பிரிட்டனில், பிரபலமான கிறிஸ்மஸ் திரைப்படங்களில் போர் படங்கள் உள்ளடங்கும். அநேகமாக இது மிகவும் விசித்திரமானது அல்ல. 1940 ஆம் ஆண்டில், நாஜி சர்வாதிகாரி ஹிட்லர் கிறிஸ்மஸ் அன்று முக்கிய பிரிட்டிஷ் நகரங்களில் ஒரு திடீர் தாக்குதலுக்கு உத்தரவிட்டார், இதனால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 1944 கிறிஸ்மஸ் பருவத்தில் அவர் தனது இரத்தக்களரியான ஆர்டென்னெஸ் தாக்குதலை ஆரம்பித்தார்.

இருப்பினும், போருக்காக கிறிஸ்மஸை விரும்புவதில் ஹிட்லர் தனியாக நிற்கவில்லை. 1950 நவம்பரில் தொடங்கிய கொரிய நகரங்களின் மீது அமெரிக்க வெடிகுண்டு தாக்குதல் கிறிஸ்மஸ் நாளில் மட்டும் நிறுத்தப்பட்டது.

1972ஆம் ஆண்டில், தெற்கு வியட்நாமை சட்டவிரோதமாக ஆக்கிரமித்த அமெரிக்கப் படைகள் வடக்கு வியட்நாமுக்கு எதிராக நீட்டிக்கப்பட்ட குண்டுவீச்சு தாக்குதலை தொடங்கின, இது " Linebacker 2" என்ற குறியீட்டுப் பெயருடன் "கிறிஸ்மஸ் குண்டுவெடிப்பு" என்று அறியப்பட்டது.

1998 ஆம் ஆண்டில், கிறிஸ்மசுக்கு முன்னதாக ஈராக்கில் அமெரிக்கா குண்டுவீச்சு தாக்குதலை நடத்தியது. மாறாக, சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானில் அதன் தலையீட்டிற்காக கிறிஸ்மஸ் பருவத்தைத் தேர்ந்தெடுத்தது.

எனவே கிறிஸ்மஸ், அதன் மனிகேயன் தத்துவத்தைப் போலவே, உலக சமாதானத்தின் அடிப்படையில் நல்ல மற்றும் கெட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது. நல்லது, இந்த கொண்டாட்டங்கள் உலகெங்கிலும் உள்ள மக்களை அன்பு, நட்பு மற்றும் சமாதானத்தின் திருவிழாவில் ஒன்றிணைக்கின்றன.

மோசமானது, அடக்குமுறையும் யுத்தமும் தடையின்றி தொடரும் காலம் அதுவாகும். 1914 கிறிஸ்மஸ் சமாதானத்தின் செய்தி இன்னமும் அறியப்படவில்லை.

வினோத் மூனசிங்க வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் இயந்திர பொறியியலை கற்றதுடன், இலங்கையில் தேயிலை இயந்திரங்கள் மற்றும் மோட்டார் உதிரிபாகங்கள் மற்றும் ரயில்வே துறைகளில் பணியாற்றினார்.

பின்னர் அவர் பத்திரிகை மற்றும் வரலாற்றை எழுத ஆரம்பித்தார். இலங்கை ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனத்தின் ஆளுநர் குழுவின் தலைவராகப் பணியாற்றினார்.