'வேலைக்கு அமர்த்துவதற்கான ஆகக் குறைந்த வயதெல்லை 16'
நாட்டில் ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான ஆகக் குறைந்த வயதெல்லை 16 என நிர்ணயிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது தொழில் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினம் நேற்று வெள்ளிக்கிழமை (ஜுன் 12) அனுஷ்டிக்கப்பட்டமைக்கு அமைவாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைய தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான ஆகக் குறைந்த வயதெல்லையாக காணப்பட்ட 14, தற்போது 16 என மாற்றப்பட்டுள்ளது அவர் தெரிவித்தார்.
தொழில் செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
Comments (0)
Facebook Comments (0)