வாகன இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி?
வாகன இறக்குமதிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்குவது தொடர்பில் எதிர்வரும் டிசம்பர் மாதம் தீர்மானிக்கவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இணையவழி கலந்துரையாடலொன்றின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டின் வெளிநாட்டு இருப்பினை தொடர்ந்தும் பேணி வருவதன் காரணமாக எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நிலவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், வாகன இறக்குமதிகளின் கட்டுப்பாட்டைத் தொடர்ந்தும் நீடிப்பதற்கும் எதிர்பார்க்கவில்லை என அவர் தெரிவித்தார்.
முழுமையாக அனுமதிப்பதால் பாரிய சிக்கல் நிலையினை எதிர்கொள்ள வேண்டியேற்படும். எனவே சில கட்டங்களின் ஊடாக வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பான தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Comments (0)
Facebook Comments (0)