கொவிட் காலத்திலும் Savari Food இன் உணவு விநியோக சேவை

கொவிட் காலத்திலும் Savari Food இன் உணவு விநியோக சேவை

மக்களின் வாழ்க்கையினை மிக இலகுவானதாக மாற்றியமைக்கும் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியானது பல்வேறு துறைகளிலும் தனது ஆதிக்கத்தினைச் செலுத்தி வருகின்றது.

அதனடிப்படையில் அபிவிருத்தியடைந்து வருகின்ற ஏனைய மாவட்டங்களைப் போன்று மட்டக்களப்பு மாவட்டத்தினையும் அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் Savari Food APP, கடந்த பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Savari Food APP மூலமாக மட்டக்களப்பு நகரத்தில் வாழும் மக்களுக்கும்  மட்டக்களப்பு நகரத்திலிருந்து 15km சுற்றுவட்டாரத்திற்குட்பட்ட பிரதேசங்களில் வாழும் மக்களுக்குப் பிடித்த உணவகம் மற்றும் கடைகளில் இருந்து சமைத்த மற்றும் சமைக்காத உணவுகளை இருக்குமிடத்திலிருந்தே இலகுவாகத் தெரிவுசெய்துகொள்ளும் சந்தர்ப்பத்தினை Savari Food APP ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.

அத்துடன் நட்சத்திர உணவகங்கள் முதல் சிறிய உணவகங்கள் மற்றும் வீடுகளில் தயாரிக்கப்படும் உணவுகள் வரை கிட்டத்தட்ட 80 இற்கும் மேலதிகமான உணவு விநியோகஸ்தர்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளனர்.

விரைவாகவும், மிகக் குறைந்த கட்டணத்திலும், Delivery மூலமாகவும், முற்றிலும் இலவசமாக காத்திருப்புக்களின்றி Self-Pickup மூலமாகவும் உணவுகளைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பினை இந்த APP உருவாக்கியுள்ளது.

COVID19 காலப்பகுதிகளில் மக்கள் சனநெரிசலாக உணவகங்களில் காத்திருக்காது உணவுகளை இலகுவாகப் பெற்றுக் கொள்வதற்கான வசதிகளையும் Savari Food APP உருவாக்கியுள்ளது..

Savari Food APP தனது சேவைகளை மக்கள் இலகுவாக பெற்றுப் பயனடையக் கூடிய வசதியினை வழங்கியுள்ளதுடன், இத்தகைய சேவைகளின் மூலமாக  மட்டக்களப்பு மக்களின் வாழ்க்கையை இலகுபடுத்தி விரைவாகவும், பாதுகாப்பாகவும் உணவுத் தெரிவுகளை மேற்கொண்டு உணவுகளைப் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளையும் தொழில்நுட்ப ரீதியில் உருவாக்கியுள்ளது.

அதுமட்டுமல்லாது பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் சுயதொழில் வாய்ப்புக்களை ஊக்குவித்து வளர்ச்சிபெறச் செய்யவும், இளைஞர் யுவதிகளுக்கு முழு நேர மற்றும் பகுதி நேர தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கவும், வீடுகளில் உணவு உற்பத்திகளை தயாரித்து விநியோகிப்போர், உணவக உரிமையாளர்கள் போன்றவர்களின் உணவு உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்குமான சிறந்த தளமாக சவாரியின் சேவைகள் காணப்படுகின்றன.

இதனூடாக மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தினையும் Savari Food வழங்கியுள்ளது. இதன்மூலம் இந்நிறுவனத்தினால் முழு நேர  மற்றும் பகுதி நேரமாக 50 இற்கும் அதிகமான இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படுள்ளன.

தற்போது நாட்டிலுள்ள நிலவுகின்ற Covid 19 சூழ்நிலையிலும் பயணத்தடை மற்றும் ஊரடங்கு காலங்களிலும் மக்களின் அன்றாடத் உணவுத் தேவைகளையும், பாதுகாப்பினையும் கருத்திற்கொண்டு; தங்குதடையின்றி சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மக்களுக்கு சிறப்பான சேவையினை சவாரி புரிந்து வருகின்றது.

மட்டு நகரில் பொது முடக்கத்தின் போது சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட மற்றும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள குடும்பங்கள் மற்றும் தனிநபர்களுக்கு அவர்களின் நன்மை கருதி சவாரி தனது உணவு விநியோக சேவையை சுகாதார முறைகளை பின்பற்றி நேரடியாக தொடர்பற்ற முறையில் வழங்கி வருகின்றது. தொழில்நுட்ப ரீதியில் பணப்பரிமாற்றமும், பாதுகாப்பான உணவு விநியோகமும் மக்களுக்கு ஏற்ற விதத்தில் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மிக விரைவில் சவாரியின் சேவைகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுவதும் விஸ்தரிக்கப்பட்டு அதனது சேவையினைத் தொடரும் என Maxmetrics Ventures (Pvt) Ltd இயக்குனரும், Savari Food தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு. தேவதாசன் மயூரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.