டிஜிட்டல் அமைதிக்கான பிரசாரங்களை தொடங்கும் புதிய இளம் தலைவர்கள்

டிஜிட்டல் அமைதிக்கான பிரசாரங்களை தொடங்கும் புதிய இளம் தலைவர்கள்

அஹ்ஸன் அப்தர்

சமூக மாற்ற நிறுவனமான லவ் பிரான்கி செயற்படுத்திய 'யுனைடெட் கிரியேட்டிவ்ஸ்' திட்டத்தை இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளின் இளம் படைப்பாளிகள் வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டமும் ஐரோப்பிய ஒன்றியமும் இவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளன. குறித்த இளைஞர்கள் கடந்த 15 வாரங்களாக டிஜிட்டல் அமைதியினைக் கட்டமைக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று வருகிறனர்.

வெறுக்கத்தக்க பேச்சு, தவறான தகவல்கள்; மற்றும் பாகுபாடு ஆகியவற்றைக் கையாளும் இணையவெளி பிரசாரங்களை உருவாக்க தங்கள் கற்றல்களை இவர்கள் பயன்படுத்துகின்றனர்.

இலங்கை மற்றும் மாலைத்தீவில் இருந்து பங்குபற்றிய எட்டு அணிகளில் இரண்டு அணிகளை முதன்மை அணிகளாக யுனைடெட் கிரியேட்டிவ்ஸ் தெரிவு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சித் திட்டம் குறித்து ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் மாலைத்தீவிற்கான பிரதிநிதி வேரா ஹக்கீம் கருத்துத் தெரிவிக்கையில்,

"யுனைடெட் கிரியேட்டிவ்ஸ் போன்ற முன்முயற்சிகளில் ஒத்துழைப்பதில் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம் மகிழ்ச்சியடைகிறது. இது இளைஞர்களின் படைப்பாற்றல், புதுமைகள் மற்றும் மாலைத்தீவில் மிகவும் சகிப்புத்தன்மையுள்ள, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் அமைதியான சமுதாயத்திற்காக பெட்டியிலிருந்து சிந்திக்கும் திறனைக் கொண்டுள்ளது" என்றார்.

இதேவேளை, "கொவிட்-19, உலகின் வேறு சில நாடுகளைப் போலவே, இலங்கையிலும் வருமான ஏற்றத்தாழ்வுகளையும் சமூக பிளவுகளையும் பெரிதுபடுத்தியுள்ளது, சமூக ஒத்திசைவான சமூகங்களை உருவாக்குவதற்கான முயற்சிகளை சவால் செய்கிறது" என ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பைசா எபெண்டி கூறினார்.

"சமூக வலைப் பின்னல்களை நாங்கள் சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும், தவறான தகவல்களில் அவர்களின் பங்கைக் கவனிக்க வேண்டும். எனவே இலங்கை மற்றும் மாலத்தீவில் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம் ஊக்குவித்த டிஜிட்டல் சமாதான முயற்சிகளை ஆதரிப்பதில் ஐரோப்பிய ஒன்றியம் பெருமிதம் கொள்கிறது" என இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின்  தூதுவர் டெனிஸ் சைபி தெரிவித்தார்.

பங்கேற்புக்கு முந்தைய மற்றும் பிந்தைய கணக்கெடுப்பின்படி பங்கேற்பாளர்களில் 89 வீதமானவர்கள் இணையவெளியில் சமூக தாக்கத்திற்கான பயனுள்ள கதைகளைச் சொல்லும் திறனைப் பற்றி நம்பிக்கையுடன் உள்ளார்கள் என தெரிய வந்தது.

மேலும் 96 வீதமான இளம் தலைவர்கள் தாங்கள் உள்ளடக்கத்தினை ஊக்குவிக்கும் விடயங்களைத் தொடர்ந்து உருவாக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.