காசாவில் மனிதாபிமானப் பேரழிவு; பல்முனைவுதன்மையான உலக ஒழுங்கில் "R2P" இனை மீள்பரிசீலனை செய்தல்
லக்மாலி பாக்யா மனம்பேரி
பலஸ்தீனத்தில், மனிதாபிமான நெருக்கடியின் போது அப்பாவி பொதுமக்களின் பாதுகாப்பிற்கான சர்வதேச சமூகத்தின் பொறுப்பு அண்மைக்காலமாக அதிகரித்து வரும் மோதல்களின் மூலமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பொதுமக்கள் மற்றும் பொதுமக்களின் சொத்துக்களை இலக்கு வைத்து நடாத்தப்படும் தாக்குதல்கள் சர்வதேச மனிதாபிமான விழுமியங்களை தெளிவாக மீறுவதென்பதுடன், இதனை குறிப்பிடுவதற்கு மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் என்பதை விட சிறந்த பெயர் இருக்க முடியாது.
இஸ்ரேலிய - பலஸ்தீனிய மோதல் ஒரு சிக்கலான நிகழ்வாக உள்ளதுடன், வெறுமனே மதம்சார் பதட்டத்திற்கு அப்பால் ஓர் புவிசார் அரசியல் நெருக்கடியாக உள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், மோதல் ஒருபோதும் "வெற்றிடத்தில்" நடப்பதில்லை, ஆனால் இது ஒரு வரலாற்று வளர்ச்சியாகும் என்றும், இதன் மூலம் பலஸ்தீனியர்கள் "56 ஆண்டுகளாக மூச்சுத் திணறலான ஆக்கிரமிப்புக்கு உட்பட்டுள்ளதுடன்" அவர்களது சொந்த நிலத்தில் இடம்பெயர்ந்துள்ளனர் என சுட்டிக்காட்டினார்.
இந்த அறிக்கை இஸ்ரேலை ஐ.நா. தலைமையின் உடனடியான பதவி விலகலுக்கு அழைப்பு விடுக்கவும், ஐ.நா பிரதிநிதிகளுக்கு விசா வழங்குவதை ரத்து செய்வதற்கான அறிவிப்பை வெளியிடவும் தூண்டியது.
இந்த விருத்திகளின் பின்னணியில், பலஸ்தீனியர்களாக இருந்தாலும் சரி, இஸ்ரேலியராக இருந்தாலும் சரி, மக்கள் படும் துன்பங்களுக்கு ஆதரவாக பலர் நின்றதுடன், இந்த பல தசாப்த கால அரசியல் முட்டுக்கட்டைக்கு உடனடியான தீர்வு காண அழைப்பு விடுக்குமாறு ஐ.நா.விடம் கோரினர்.
ஐ.நா.வின் ஆணைக்குள் மனிதாபிமான தலையீடு
ஐக்கிய நாடுகள் சபையானது சர்வதேச சமாதானம் மற்றும் பாதுகாப்பை பேணும் நோக்கத்துடன் 1945 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
ஐ.நா சாசனத்தின் உறுப்புரை 2, உறுப்பு நாடுகளிடையே இறையாண்மை சமத்துவத்தை நிலைநிறுத்துவதுடன், இதன் மூலம் எந்தவொரு அரசாங்கமும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த காரணத்திற்காகவும், வேறெந்த நாடுகளின் உள்ளக அல்லது வெளி விவகாரங்களில் தலையிட உரிமை இருப்பதில்லை.
இதேநேரத்தில், ஐ.நா சாசனத்தின் 51 வது உறுப்புரை உறுப்பு நாடுகளுக்கு தற்காப்புக்காக பலத்தை பயன்படுத்துவதற்கு வரையறுக்கப்பட்ட உரிமையை அனுமதிப்பதுடன், ஹமாஸ் மீதான எதிர் தாக்குதலுக்கு இஸ்ரேல் காரணங்களை வழங்குவது அதே அடிப்படையிலாகும்.
எவ்வாறாயினும், இந்த நியாயப்படுத்தல் ஆக்கிரமிப்புக்கான தாக்குதலின் விகிதாசார நியதிகளுடன் பொருந்தினாலும், அதன் அவசியம் மற்றும் நியாயத்தன்மை விவாதத்திற்குரியதாகவே உள்ளது.
காசா நகரில் உள்ள அல் - அஹ்லி அரபு மருத்துவமனை, அல் - அஸ்ஹர் பல்கலைக்கழக வளாகம் மற்றும் 4,000 இடம்பெயர்ந்த மக்கள் அகதிகள் முகாமில் குடியேறியுள்ள அல் மகாசியில் அமைந்துள்ள UNRWA பாடசாலை (பலஸ்தீனிய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி முகவரகம்) அம்புலன்ஸ் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் மற்றைய குடிமக்களுக்கு மேலதிகமாக 15 பலஸ்தீனியர்களை கொன்றமை போன்ற சமீபத்திய சம்பவங்கள் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் தெளிவான மீறல்களாகும்.
வைத்திய பராமரிப்புக்கான அணுகலின் பற்றாக்குறை மற்றும் எரிபொருள் மற்றும் மனிதாபிமான உதவிகள் மீதான தடை ஆகியவை நிலைமையை மேலும் அபாயகரமானதாக்கியுள்ளது.
மேற்கிலிருந்து மற்ற பகுதிகளுக்கு விழுமியங்களின் பரவல்
மிகப்பாரிய மனிதாபிமான நெருக்கடி மற்றைய தேசிய நாடுகளின் மனிதாபிமான தலையீட்டிற்கு அழைப்பு விடுக்கிறது. பல தசாப்த கால யுத்தத்தின் போதும், அதன் பின்னரான அனுபவங்களைக் கொண்ட இலங்கையர்களுக்கு பொதுவாகக் கேட்கப்படும் எண்ணக்கருவான பாதுகாப்பிற்கான பொறுப்பு, சர்வதேச உரையாடலில் தனது நிலையை மீட்டெடுத்துள்ளது.
2001ஆம் ஆண்டில் தான் தலையீடு மற்றும் அரச இறையாண்மைக்கான சர்வதேச ஆணையம் (ICISS) அதன் பிரதான அறிக்கையான “பாதுகாப்பிற்கான பொறுப்பு”, அரச இறையாண்மையானது பொறுப்புக்களையும் உரிமைகளை உள்ளடக்கியது என்ற அதன் மைய முன்மொழிவுடன் வெளியிட்டது.
ஒரு அரசாங்கத்தின் இறையாண்மை நியாயாதிக்க எல்லைக்குள் உள்ள அனைத்து மக்களையும் பாதுகாப்பது என்பது அத்தகைய ஒரு பொறுப்பாகும்.
ஒரு அரசாங்கம் இயலளவின்மை, விருப்பமின்மை அல்லது குற்றங்களில் உடந்தையாக இருப்பதால் இந்தக் கடமையைச் செய்யத் தவறினால், பொறுப்பானது ஐ.நா சாசனத்தின் 42 வது உறுப்புரையின் பிரகாரம் ஐ.நா பாதுகாப்பு பேரவை (UNSC) மூலமாக செயற்படும் சர்வதேச சமூகத்திடம் செல்கின்றது.
உண்மையில், இது அரச இறையாண்மைக்கு மற்றொரு விதிவிலக்காக மனிதாபிமான தலையீட்டின் கொள்கையை மீள்வரையறை செய்கின்றது.
மேற்குலகம், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை தீர்மானத்தின் மூலமாக, பின்வரும் தூண்களின் அடிப்படையில் பாதுகாப்பிற்கான பொறுப்பு (R2P) கோட்பாட்டிற்கு ஒப்புதலளித்தது:
ஒவ்வொரு அரசாங்கத்திற்கும் அதன் மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு; தங்களது மக்களைப் பாதுகாப்பதில் அரசாங்கங்களுக்கு உதவுவதற்கான சர்வதேச சமூகத்தின் பொறுப்பு; ஒரு அரசு தனது மக்களைப் பாதுகாப்பதில் வெளிப்படையாகத் தவறினால், அதைப் பாதுகாப்பது சர்வதேச சமூகத்தின் பொறுப்பு. R2P சாய்ந்துபோகாது, தள்ளர்வுறாது, தகர்வுறாது இருப்பதை தடுப்பதற்கு மூன்று தூண்களும் சம உயரத்தில் இருக்க வேண்டும்.
2005 உலக உச்சி மாநாட்டில் ஐ.நா பொதுச் சபையால் இந்த கோட்பாடு ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இஸ்ரேலும் அதனை ஏற்றுக் கையெழுத்திட்டது.
இஸ்ரேல் காசாவின் மீது வினைத்திறனான கட்டுப்பாட்டை செலுத்துவதுடன், இது சுதந்திரமான அரசு அல்லாத அதனுடைய நடைமுறையாக ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசமாகும்.
எனவே, பல தசாப்தங்களாக, சர்வதேச கருவிகளுக்கு முரணான அட்டூழியங்களில் இருந்து தனது மக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் தவறிவிட்டது. இது R2P கோட்பாட்டால் குறிப்பிடப்பட்ட நியதிகளுடன் தெளிவாக பொருந்துகிறது.
R2P மற்றும் உலகளாவிய தரப்பினர்
"பாதுகாப்பிற்கான பொறுப்பு" என "மனிதாபிமான தலையீடு" மீள்வடிவமைக்கப்பட்டமை நீண்ட காலமாக ஐ.நாவின் அதிகாரப்பூர்வ உரையாடலில் "சர்வதேச விழுமியம்" என்று குறிப்பிடப்படுவதுடன், அங்கு UN அமைப்புகள் வழக்கமாக தீர்மானங்களுக்குள் கோட்பாட்டைப் பயன்படுத்துகின்றன.
சர்வதேச உறவுகளில் முக்கிய வகிபங்கை வகிக்கின்ற பெரும் வல்லரசுகளுக்கு மத்தியில், மேற்கத்திய நாடுகள் அல்லாத நாடுகள் கோட்பாட்டின் மீது விரோதமான கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளன.
பெரும்பாலும் மேற்கத்திய அறிவூட்டலின் ஓர் நெறிமுறை என்று குற்றம் சாட்டப்படுவதுடன், இது பலவீனமான அரசாங்கங்களின் "இறையாண்மை சக்தியை" அகற்றுவதற்கும் கீழ்ப்படிய வைப்பதற்குமான உள்ளார்ந்த போக்கைக் கொண்டுள்ளது.
மேற்கத்திய நாடுகள் அல்லாத நாடுகள் கடந்த காலத்தில் மனிதாபிமானத் தலையீடுகள் பலனளிக்கவில்லை என்றும் சில சமயங்களில் நெருக்கடி நிலைகளை மோசமாக்கியதென்றும் புதிய பிரச்சினைகளை உருவாக்கியது என்றும் கூறுகின்றன.
மேற்கத்தியதல்லாத நாடுகள், சர்வதேச அமைப்பில் உள்ள சக்தி வாய்ந்த அரசுகள் எவ்வாறு உறுதிமொழிகளில் பின்வாங்குகின்றன அல்லது இந்த முயற்சிகளுக்கு ஆதரவாக செயற்படுகின்ற பிரதான சர்வதேச அமைப்புகளை மேலும் பலவீனப்படுத்தும் வாய்ப்பைப் பார்க்கின்றன என்பதற்கான ஆதாரங்களையும் வழங்குகின்றன.
காசாவில் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானங்களின் சமீபத்திய தோல்விகள், இந்த வாதத்தையும் மனிதாபிமான கட்டாயம் P5 (ஐ.நா. பாதுகாப்பு பேரவையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்கள்: அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ்) மூலமாக மேற்கு நாடுகளால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது.
ஐ.நா அமைப்பினுள் உள்ள புவிசார் அரசியல் கட்டுப்பாடுகளுடன் பின்னிப்பிணைந்துள்ளது என்ற வாதத்தையும் நிரூபிக்கிறது. ஐ.நா. சாசனத்தின் 27வது உறுப்புரையின் கீழ், நடைமுறை தொடர்பான விடயங்களைத் தவிர மற்ற அனைத்து விடயங்களிலும், பேரவையின் தீர்மானங்கள் நிரந்தர உறுப்பினர்களின் ஒப்புதல் வாக்குகள் உட்பட ஒன்பது உறுப்பினர்களின் உறுதியான வாக்கு மூலமாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
UNSCயின் தீர்மானமெடுக்கும் நடைமுறைகளில் வீட்டோ அதிகாரம் தெளிவாகத் தெரிவதுடன் அது காசாவில் நாளுக்கு நாள் அப்பாவிப் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நெருக்கடியைத் தடுக்க அல்லது தவிர்க்க எடுக்கப்பட்ட பல ஆக்கபூர்வமான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளை முடக்கியுள்ளது.
இன்றைய நிலவரப்படி, பாதுகாப்பு பேரவை காஸாவில் எழுகின்ற போரைக் நிவர்த்திசெய்ய ஒன்று பிரேசிலில் இருந்து, இரண்டு ரஷ்ய கூட்டமைப்பிலிருந்து, மற்றும் மற்றொன்று அமெரிக்காவில் இருந்து முன்வைக்கப்பட்ட எந்த வரைவுத் தீர்மானங்களையும் ஏற்கத் தவறிவிட்டது.
அக்டோபர் 16 அன்று ரஷ்ய கூட்டமைப்பு முன்வைத்த ஆரம்ப தீர்மானம் காஸாவில் மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. முக்கிய முன்மொழிவுகளில் அக்டோபர் 7 முதல் சிறைப்பிடிக்கப்பட்ட அனைத்து மக்களையும் விடுவித்தல், உதவிக்கான அணுகல் மற்றும் பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுதல் ஆகியவை உள்ளடங்கும். இதற்கு ஆதரவாக சீனா, ரஷ்யா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட 5 நாடுகள் வாக்களித்தன.
பிரான்ஸ், ஜப்பான், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன, பிரேசில், ஈக்வடார் மற்றும் சுவிட்சர்லாந்து உட்பட ஆறு நாடுகள் வாக்களிக்கவில்லை. அந்தத் தீர்மானத்தில் ஹமாஸின் பெயரையோ அல்லது கண்டித்தோ எதுவும் குறிப்பிடவில்லை என்பதுதான் அதை எதிர்ப்பவர்களின் முக்கிய விமர்சனமென ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒக்டோபர் 18 அன்று முன்வைக்கப்பட்ட பிரேசிலின் வரைவுத் தீர்மானம் காசாவில் முழுமையான மற்றும் தடையில்லா உதவியை அனுமதிக்கவும், அனைத்து பொதுமக்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டிக்கவும் மற்றும் இஸ்ரேலின் வெளியேற்ற உத்தரவை ரத்து செய்யகின்ற ஓர் "மனிதாபிமான இடைநிறுத்தத்திற்கு” அழைப்பு விடுத்தது.
இந்தத் தீர்மானத்துக்கு அமெரிக்காவால் வீட்டோ அதிகாரம் பயன்படுத்தப்பட்டதுடன், அது இஸ்ரேலின் தற்காப்பு உரிமையை வலியுறுத்த போதுமானதாக இல்லை என்று கூறியது. 12 நாடுகள் ஆதரவாக வாக்களித்தபோது ரஷ்யாவும் இங்கிலாந்தும் வாக்களிக்கவில்லை.
ரஷ்ய கூட்டமைப்பின் இரண்டாவது பதிப்பு சீனா, காபோன், ரஷ்ய கூட்டமைப்பு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என நான்கு நாடுகள் ஆதரவாகவும் எதிராக ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா என இரண்டு நாடுகளும் அல்பேனியா, பிரேசில், ஈக்வடார், பிரான்ஸ், கானா, ஜப்பான், மால்டா, மொசாம்பிக் மற்றும் சுவிட்சர்லாந்து என ஒன்பது நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமலும் தோல்வியடைந்தது.
அது வடக்கு காசாவிற்கான இஸ்ரேலின் வெளியேற்ற உத்தரவை உடனடியாக ரத்து செய்யுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்ததுடன் இஸ்ரேலின் "தற்காப்புக்கான இயல்பான உரிமை" தொடர்பில் குறிப்பிடவில்லை, இது முழு உரையையும் "சமநிலையற்றதாக" மாற்றியதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், சமீபத்திய அமெரிக்க தீர்மானம் ஆதரவாக 10 வாக்குகளுடனும் எதிராக சீனா, ரஷ்ய கூட்டமைப்பு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என இரு நாடுகளும் பிரேசில் மற்றும் மொசாம்பிக் ஆகிய இரு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமலும் தோல்வியடைந்தது.
இது போர் நிறுத்தம் அல்லாது காஸாவுக்குள் உதவிகளை அனுமதிப்பதற்கான "மனிதாபிமான இடைநிறுத்தத்திற்கு" அழைப்பு விடுத்தது.
இந்த உரை தற்காப்புக்கான அனைத்து அரசாங்கங்களின் இயல்பான உரிமைக்கு ஆதரவாக வரைவு செய்யப்பட்டதுடன் ஹமாஸ் தனது கைதிகள் அனைவரையும் விடுவிக்க வலியுறுத்தியது.
சீனாவுக்கான ஐ.நா தூதர் ஜாங் ஜுன், சில மணிநேரங்கள் மட்டுமே நீடிப்பதுடன் சண்டையை முடிவுக்குக் கொண்டு வரவோ அல்லது பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்கவோ தவறியிருக்க கூடிய "மனிதாபிமான இடைநிறுத்தம்" மற்றும் "போர்நிறுத்தம்" ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தை வரைவதன் மூலமாக அவர்களின் வீட்டோ அதிகார பிரயோகத்தின் காரணத்தை விளக்கினார்.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நிரந்தர பேரவை உறுப்பினரின் வீட்டோ அல்லது "இல்லை" என்ற வாக்கின் காரணமாக, இந்தத் தீர்மானங்கள் அனைத்தும் தோல்வியடைந்ததுடன், மனிதாபிமான தேவைகள் மீது ஒவ்வொருவரும் தங்கள் கூட்டாளர்களையும் அவர்களின் சொந்த நலன்களையும் பாதுகாப்பதை தவிர்க்க முடியாததாக ஆக்குகிறது
சீனா மற்றும் ரஷ்யாவின் எழுச்சி
பல்முனைவுத்தன்மையான உலக ஒழுங்கிற்குள், R2P தொடர்பான ஒருமித்த கருத்து தொடர்ந்து தள்ளாடுகிறது. இது சர்வதேச அமைப்பில் மேற்கிலிருந்து கிழக்கிற்கு அதிகாரத்தை மீள்பகிர்வு செய்யும் நிலை மனித பாதுகாப்பின் அடிப்படையிலானவை உட்பட, தற்போதைய நிலை மற்றும் நடைமுறையில் உள்ள விழுமியங்களை சவாலுக்குட்படுத்துகின்ற நேரத்தில் வருகிறது.
பேராசிரியர் அப்தெல்வஹாப் எல்-அஃபென்டி அல்-ஜசீராவுக்கு எழுதிய கடிதத்தில், ஒக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் நடாத்திய தாக்குதல் அதன் மிருகத்தனத்தால் மிகவும் தனித்து நிற்கிறது, மாறாக அதன் துணிச்சலானது, பிராந்தியத்தில் மேற்கத்திய துரதிர்ஷ்டங்களால் உருவாக்கப்பட்ட பாதுகாப்பின்மை, போர் நிறுத்தம் மற்றும் மனிதாபிமான இடைநிறுத்தங்களுக்கான அழைப்புகளுக்கு அவர்களின் கலவையான பதில்களில் நன்கு எதிரொலிக்கும் பாதுகாப்பின்மை ஆகியவற்றால் நன்றாக எதிரொலிக்கிறது.
இதனால், சீனாவின் எழுச்சி மற்றும் UNSC தீர்மானங்களில் ரஷ்யாவின் மறுமலர்ச்சி ஆகியவை ஐ.நா பாதுகாப்பு பேரவையில் நிரந்தர உறுப்பினர்களுக்கு இடையேயான பரிமாணத்தை வடிவமைக்கக்கூடிய பதற்றம் மற்றும் உராய்வு புள்ளிகளை உருவாக்குகிறது.
இந்த உரையாடலில் அவர்களின் பங்கேற்பு UNSCயின் செயற்பாடுகளை சீரானதாகவும், வற்புறுத்தக்கூடியதாகவும், உண்மையான அரசு மற்றும் மனித பாதுகாப்புத் தேவைகளுக்கு முழுமையாகப் பதிலளிக்கக்கூடியதாகவும் மாற்ற முயற்சிப்பவர்களான மேற்கத்திய நாடுகள் அல்லாத நாடுகளுடன் எதிரொலிக்கிறது.
"மனிதாபிமான காரணத்தை" R2P ஆக வடிவமைக்கத் தயங்குவது, அவர்கள் கோட்பாட்டின் வரலாற்றில் பொருந்தக்கூடிய தன்மையுடன் நிற்கவில்லை என்றும், அதை மீண்டும் மீண்டும் செய்வதை ஆதரிக்கவில்லை என்றும் அறிவுறுத்துகிறது.
உலகப் பொருளாதாரத்தில் சீனாவும் ரஷ்யாவும் முக்கியமான வளர்ச்சி மையங்களாக வெளிவருகையில், மேற்குலகு "மிகுதி உலகை" மதிக்காத யுகம் சவாலுக்குள்ளாகி வருவதாகத் தெரிவதுடன், மேற்கிலிருந்து மற்ற நாடுகளுக்கான விழுமிய பரவல் தலைகீழாக மாற்றமடைகின்றது.
லக்மாலி பாக்யா மனம்பேரி இலங்கையில் உள்ள ஆசிய பசுபிக் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் அல்லது APIIT சட்டப் கல்லூரியில் சட்ட விரிவுரையாளராவார். அவரை lakmali.manamperi3@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
Comments (0)
Facebook Comments (0)