இலங்கையில் பாலியல் இலஞ்சத்தை அடையாளப்படுத்தல்
ஆசிய மன்றத்தின் (The Asia Foundation) உதவியுடன் இலங்கையில் பாலியல் இலஞ்சம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றினைச் சமத்துவம் மற்றும் நீதிக்கான நிலையம் (Centre for Equality and Justice- CEJ) நடைமுறைப்படுத்துகின்றது.
அரசாங்க உத்தியோகத்தர் போன்ற (உ+ம்: கிராம சேவகர், பொலிஸ் உத்திபோகத்தர், சமுர்த்தி/நலன்புரி உத்தியோகத்தர், நீதிபதி போன்ற) அதிகாரத்தில் உள்ள ஒருவர், உரித்தான சேவைகள் அல்லது பயன்களை வழங்குவதற்கு பாலியல் செயற்பாடு முன்னெடுக்கப்படல் வேண்டும் என நிர்ப்பந்திப்பது அல்லது கட்டாயப்படுத்துவது பாலியல் இலஞ்சம் எனப்படும்.
உலகளாவிய ரீதியில் பயம், புரிந்துணர்வின்மை மற்றும் பாலியல் இலஞ்சம் தொடர்பான ஆய்வு இன்மையால் அறிக்கைப்படுத்தப்படாத ஒன்றாகப் பாலியல் இலஞ்சம் என்பது காணப்படுகின்றது.
இலங்கையில், அரச சேவைகளை அணுகும் போது தனிநபர்கள், குறிப்பாகப் பெண்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் மாற்றுப் பால்நிலை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் (LGBTQI) பாலியல் இலஞ்சத்தை எதிர்கொள்வதாக CEJ இனால் நிறைவு செய்யப்பட்ட மற்றும் தற்போது முன்னெடுக்கப்படும் ஆய்வு காட்டுகின்றது. அத்தகைய சேவைகள் மறுக்கப்படுதல் அவர்களது சமூக-பொருளாதார, சிவில் மற்றும் அரசியல் உரிமைகளின் மீறல்களாகும்.
சுகாதார மற்றும் நீதித் துறைகள் தொடர்பான விசேட அக்கறையுடன் பாலியல் இலஞ்சம் நிகழ்தல் தொடர்பான ஆய்வுக் கற்கை என்பதே இந்தச் செயல்திட்டத்தின் பிரதான அம்சமாகும்.
பாதிக்கப்பட்டுத் தப்பிப்பிழைத்தவர்கள் மற்றும் இலக்குக் குழுக் கலந்துரையாடல்களுடன் பிரதான தகவல் வழங்குநர் நேர்காணல்களைப் பயன்படுத்தி, உள்ளக சூழ்நிலையில் பாலியல் இலஞ்சத்திற்கு பங்களிப்புச் செய்யும் காரணிகள் பற்றி அறிந்துகொள்வதற்கு CEJ எதிர்பார்க்கின்றது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் (CIABOC) உத்தியோகத்தர்களுக்கான பால்நிலை மற்றும் பாலியல் இலஞ்சம் தொடர்பான பல்வேறு திறன்களைக் கட்டியெழுப்பல் தொடர்பிலான செயலமர்வுகளை முன்னெடுத்துள்ளது.
அண்மையில், ஊழலின் ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் அருவெறுக்கத்தக்க வடிவிலான பாலியல் இலஞ்சம் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்கு முழுமையான ஊடகப் பிரச்சாரம் ஒன்றினை CEJ ஆரம்பித்தது.
ஊழலற்ற சேவைகளை ஊக்குவித்தல் மற்றும் அரச துறையில் பாலியல் இலஞ்சத்திற்கான சகிப்பின்மையை அமுலாக்கல் மூலம் பாலியல் இலஞ்சத்தை முடிவு செய்வதில் இலங்கையில் மிகவும் பாரிய தொழில்வலுவான அரச துறையானது தலைமை வகிக்கமுடியும் என CEJ உறுதியாக நம்புகின்றது.
அந்த வகையில், எமது முழுமையான அணுகுமுறையின் ஒரு அங்கமாக, ஐக்கிய நாடுகள் பொதுச் சேவைகள் தினத்தில் இணையதளம் மூலமான பிரச்சாரம் ஒன்றை CEJ ஆரம்பித்தது.
பாலியல் இலஞ்சம் தொடர்பாக அறிந்துகொள்வதற்கும் பாதுகாப்பான மற்றும் நியாயமான சமூகங்கங்களை உருவாக்குவதற்கு எவ்வாறு நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பில் எமது சமூக ஊடகங்களில் Webpage, Facebook English, Facebook Sinhala, Facebook Tamil, Twitter, Instagram இந்தப் பிரச்சாரத்தைத் தொடருமாறு நாம் உங்களை அழைக்கின்றோம்.
Comments (0)
Facebook Comments (0)