ACJU இன் தலைவராக றிஸ்வி முப்தி மீண்டும் தெரிவு
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவராக அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
மூன்று வருடங்களுக்கு ஒரு தடை நடைபெறும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுக் கூட்டம் இன்று (18) சனிக்கிழமை கண்டி, கட்டுகலை ஜும்ஆ மஸ்ஜிதில் இடம்பெற்றது.
இதன்போதே, அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவராக முப்தி மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2003ஆம் ஆண்டு முதல் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவராக இவர் செயற்பட்டு வருகின்றார்.
இந்த பொதுக் கூட்டத்தின் போது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைமை பதவியில் மாற்றமொன்று நிகழும் என பலரும் எதிர்பார்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளராக அஷ்ஷெய்க் அர்கம் நூராமீத் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் பொருளாராக கலாநிதி அஷ்ஷெய்க் அஸ்வர் அஸ்ஹரியும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
Comments (0)
Facebook Comments (0)