கொழும்பில் கட்டாரின் தேசிய விளையாட்டு தின நிகழ்வுகள்
கட்டாரின் தேசிய விளையாட்டு தினம் கடந்த செவ்வாய்க்கிழமை (11) கொழும்பில் கொண்டாடப்பட்டது. கொழும்பிலுள்ள கட்டார் தூதுவராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு விகாரமகா தேவி பூங்காவில் இடம்பெற்றது.
இலங்கைக்கான கட்டார் தூதுவர் ஜாசிம் பின் ஜாபர் அல் சோரூர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல நாடுகளின் இராஜதந்திரிகள், கட்டார் தூதுவராலயம் மற்றும் கட்டார் ஷெரிட்டி ஆகியவற்றின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானியின் நோக்கத்தின் அடிப்படையிலேயே பெப்ரவரி 11ஆம் திகதி தேசிய விளையாட்டு தினம் கட்டாரினால் கொண்டாடப்படுகின்றது.
விளையாட்டுக்களின் முக்கியத்துவம் மற்றும் தனிநபர்ளதும் சமூகத்தினதும் ஆரோக்கியமான வாழ்க்கையில் விளையாட்டின் பங்கு ஆகியன தொடர்பில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
Comments (0)
Facebook Comments (0)