கொழும்பில் சர்வதேச அரேபிய சிறுத்தைகள் தின நடை பவணி
சர்வதேச அரேபிய சிறுத்தைகள் தினத்தினையொட்டி "Cat Walk" எனும் நிகழ்வினை கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயம் கடந்த திங்கட்கிழமை (10) கொழும்பில் ஏற்பாடு செய்திருந்தது.
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானியின் வழிகாட்டலிலான இந்த நிகழ்வு கொழும்பு - காலி முகத்திடலில் இடம்பெற்றது. இதில் பல நாடுகளின் இராஜதந்திரிகள் மற்றும் தூதுவராலய உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
அரேபிய சிறுத்தைகளை பாதுகாக்கும் நோக்கில் சவூதி அரேபியாவினால் முன்மொழியப்பட்ட சர்வதேச அரேபிய சிறுத்தைகள் தினம் எனும் முன்மொழிவு 30க்கு மேற்பட்ட நாடுகளின் அனுசரனையுடன் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.
வனவிலங்குகள் மற்றும் உயிரியல் பன்முகத்தன்மையை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் முயற்சியிலேயே இந்த சர்வதேச தினம் பிரகடணப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)