'கொரோனா ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான சுற்றறிக்கை மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும்'
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை தகனம் அல்லது அடக்கம் செய்வதற்கான புதிய நடைமுறைகள் தயாரிக்கப்பட்டு வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
சுகாதார அதிகாரிகள் இடையே நாளை (27) சனிக்கிழமை நடைபெறவுள்ள கலந்துரையாடலில் இந்த விடயம் குறித்து அதிகம் கவனம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, மார்ச் முதல் வாரத்தில் புதிய நடைமுறைகளை வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்யும் வகையிலான வர்த்தமானி நேற்றிரவு சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சியினால் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)