30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 2 மாவட்டங்களில் கட்டாய கொவிட் தடுப்பூசி
கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் கொவிட் – 19 வைரஸ் தாக்கத்திற்கான அச்சுறுத்தல் அதிகளவில் காண்பபடும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலுள்ள 30 வயது மற்றும் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசிகளை இன்று (26) வெள்ளிக்கிழமை முதல் வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் அதிக கொவிட் அச்சுறுத்தல் காணப்படும் பகுதிகளை அடையாளம் காணுமாறு சுகாதார சேசேவைகள் பணிப்பாளர் நாயகம், மேல் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்களுக்கும், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர்களுக்கும், கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரிக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
குறிப்பிட்ட பகுதிகளில் நிரந்தரமாக மற்றும் தற்காலிகமாக வசிக்கும் 30 வயது மற்றும் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசிகளை வழங்குமாறு அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது
Comments (0)
Facebook Comments (0)