கொவிட் - 19 சிகிச்சை நிலையமாக ஜாமியா நளீமியா
பேருவளை ஜாமியா நளீமியா கலாபீடத்தினை கொவிட் - 19 சிகிச்சை நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 270 கொவிட் - 19 தொற்றாளர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
துறைமுக அமைச்சர் ரோஹித் அபேய குணவர்த்தன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பழீல் ஆகியோர் இன்று (07) வெள்ளிக்கிழமை பேருவளை ஜாமியா நளீமியா கலாபீடத்திற்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு இந்த நிலமைகள் தொடர்பில் பார்வையிட்டனர்.
Comments (0)
Facebook Comments (0)