கொழும்பு மேயராக இக்பாலை நியமிக்கும் சாத்தியம்
ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள கொழும்பு மாநகரசபையின் மேயர் பதவியிலிருந்து ரோஷி சேனாநாயக்கவை நீக்கிவிட்டு, பிரதி மேயராக இருக்கும் எம்.ரீ.எம்.இக்பாலை மேயர் பதவியில் அமர்த்துவது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தராக இருந்த ரோஷி சேனாநாயக்கவின் புதல்வர், சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திலின் கொழும்பு மாவட்ட வேட்பாளராக போட்டியிடுவதுடன் மேயர் ரோஷி அக்கட்சிக்கு ஆதரவளித்து வருகின்றார்.
இந்த நிலையிலேயே மேயர் பதவியிலிருந்து ரோசியை நீக்குவதற்கான தீர்மானமொன்றை கட்சி மட்டத்தில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிய வருகிறது.
ஐக்கிய தேசியக் கட்சி சார்பில்கொழும்பு மாநாகர சபையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களை கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவுக்கு அழைத்து பேச்சு நடத்தப்பட்டது. ஆனால், கொழும்பு மாநாகர மேயர் ரோஷி சேனாநாயக்க இதில் கலந்துகொண்டிருக்கவில்லை.
எனினும் கொழும்பு மேயராக நானே தொடர்ச்சியாக செயற்படுவேன் என ரோசி சேனாநாயக்க அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)