விரைவில் ஹஜ் சட்டம்

விரைவில் ஹஜ் சட்டம்

நாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற ஹஜ் யாத்திரீகையினை ஒழுங்குபடுத்தும் நோக்கில் ஹஜ் சட்டத்தினை விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்து நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த சட்டத்தினை வரைவதற்காக ஒன்பது பேரைக் கொண்ட குழுவொன்று புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சின் செயலாளர் ஏ.எம்.பி.எம்.பீ. அதபத்துவினால் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.டப்ளியூ.ஏ. சலாம் தலைமையிலான இந்தக் குழுவின் பணிகளை மே 31ஆம் திகதியுடன் நிறைவுசெய்யப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சின் செயலாளர் வை.எல்.எம். நவவி, நீர்ப்பாசன அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.பீ. லுதுபுர் ரஹ்மான், அரச ஹஜ் குழுவின் தலைவர் றியாஸ் மிஹுலர், வக்பு நியாய சபையின் உறுப்பினரான சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.ஏ.எம். இல்யாஸ், சட்டத்தரணி அக்ரம், ஹஜ் நிதியம் தொடர்பான வங்கியாளரும் சிஷே;ட பணிப்பாளருமான சப்றி கௌஸ் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த குழுவின் செயலாளராக சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். ரயாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இக்குழுவின் உறுப்பினர்களும் உத்தியோகத்தர்களும் பங்கேற்கும் ஒவ்வொரு அமர்விற்கும் பொருத்தமான கொடுப்பனவு ஹஜ் நிதியத்திலிருந்து வழங்கப்படும் எனவும் நியமனக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.