நவராத்திரியை முன்னிட்டு 40 இந்து ஆலயங்களுக்கு நிதியுதவி
நவராத்திரி தினத்தை முன்னிட்டு இந்து சமய விழுமியங்களை ஊக்குவிக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 40 இந்து ஆலயங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கும் நிகழ்வு இன்று (15) அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இதன்போது, சம்பிரதாய ரீதியாக 10 ஆலய பரிபாலன சபைத்தலைவர்களுக்கான நிதியுதவிகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கி வைத்தார்.
கடற்றொழில் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, தோட்ட வீடமைப்பு உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன், பிரதமரின் பதுளை மாவட்ட இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான், பிரதமரின் செயலாளர் காமினி செனரத், புத்த சாசன, மத விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
கொவிட்-19 நிலைமையை கருத்தில் கொண்டு சுகாதார வழிமுறைகளை பேணி இந்த நிகழ்வு இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)