Legacy Education இன் அங்குரார்ப்பண நிகழ்வு
Legacy Education நிறுவனத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த திங்கட்கிழமை (20) ரத்மலானை Nest Academy இன் கேட்போட்கூடத்தில் நடைபெற்றது.
RAINCO குழுமத்தின் தலைவர் எஸ்.எல்.எம். பெளஸ் பிரதம அதிதியாகவும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிய முன்னணி சம்மேளனத்தின் தலைவர் எஸ். லுக்மான் அவர்கள் விஷேட அதிதியாகவும் கலந்து சிறப்பித்தார்கள்
இந்த அசாதாரண சூழ்நிலையில் அதிகளவில் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களின் கல்வித்தரத்தை சிறந்த முறையில் நெறிப்படுத்தும் நோக்கில், இலங்கையின் தலைசிறந்த விரிவுரையாளர்களின் வழிகாட்டலில் உருவாக்கப்பட்டதே Legacy Education நிறுவனமாகும்.
மொஹமட் மப்fராஷ் மற்றும் ஷிஹான் ஹனிப்f ஆகிய இரண்டு அனுபவமிக்க முகாமைத்துவ விரிவுரையாளர்களின் முயற்சியில் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம், க.பொ.த. உயர்தர மாணவர்களுக்காக இணையத்தளத்தின் மூலம் மிகத் தெளிவான வழிகாட்டல் விரிவுரைகளை வழங்கி வருகிறது.
இந்நிகழ்வில் உரையாற்றிய இந்நிறுவனத்தின் பணிப்பாளர் மப்ராஷ்:
"எமது நாட்டில் எப்பிரதேச மாணவர்களும் சிறந்த கல்வியையும் வழிகாட்டலையும் பெறுவதற்காக எமது வகுப்புக்களை ஒழுங்குபடுத்தியுள்ளோம். மாணவர்களை வளப்படுத்தும் எமது பயணத்தில் திறமையுள்ள ஆசிரியர்களுக்கும் எம்மோடு இணைந்து கொள்ளலாம்” என்று குறிப்பிட்டார்.
மூன்று மொழிகளிலும் க.பொ.த. உயர்தர விஞ்ஞான மற்றும் வர்த்தக பாடங்களுகான Online வகுப்புகளில் இணைந்து கொள்ள தொடர்பு கொள்ள இந்த இலக்கங்களுக்கு அழைக்கலாம் 0112 556 335 | 0777 771 225 | legacyeducation.lk
Comments (0)
Facebook Comments (0)