அரச வைத்தியர்களின் ஓய்விற்கான வயதெல்லை 63ஆக நீடிப்பு
அரச சேவையில் பணியாற்றும் அனைத்து தரத்திலும் உள்ள வைத்தியர்களின் ஓய்விற்கான வயதெல்லை 63ஆக நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த மே 18ஆம் திகதி அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனினால் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வறிவித்தல் மூலம் ஓய்வூதியப் பிரமாணக் குறிப்பில் செய்யப்பட்ட திருத்தம் 2021.04.20ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் எனவும் குறித்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)