'20க்கு வாக்களித்து ஏழே மாதங்களில் 75 கோடியில் பாலம், பல்கலைக்கழக கல்லூரி நிர்மாணம்'
20ஆம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்ததன் பயனாக முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவால் வாக்களிக்கப்பட்டும் செயல்படுத்தப்படாத குறிஞ்சாக்கேணி பால நிர்மாணத்தை தற்பொழுது 75 கோடியில் ஆரம்பித்துள்ளதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.
தான் பிரதமரின் இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டதையும், 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்ததையும் விமர்சிப்போருக்கு பதிலடியாகவே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூபிற்கு நேரடியாகவே அவர் இந்த பதிலை வழங்கியுள்ளார். இது தவிரஇ கடந்த நான்கரை வருட அரசியலில் இம்ரான் எம்.பியினால் செய்ய முடியாமல் போன சேவைப் பட்டியலினையும் இந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கௌரவ இம்ரான் மஹ்ரூப் (பா. உ )அவர்களே,
நான் 20க்கு வாக்களித்து 7 மாதகாலத்திற்குள் என்னாள் தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்த குறிஞ்சாக்கேணி பாலம் 75 கோடி ரூபாயில் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
அத்துடன் பல்கலைக்கழக கல்லூரிக்கான வேலைகளும் நடந்து கொண்டிருக்கிறது. ஏனைய வேலைகளுக்கும் ஒழுங்கு செய்திருக்கின்றேன் இன்ஷா அல்லாஹ் ஒவ்வொன்றாக நடைபெறும்.
நீங்கள் 4 1/2 வருடங்களாக உங்களுடைய பிரதமர் மற்றும் சகல அமைச்சர்கள் எல்லோரையும் வைத்து ஏன் கீழ்வரும் சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று கொடுக்க முடியவில்லை?
1. நீங்கள் கல்வி அமைச்சில் கண்காணிப்பு உறுப்பினராக இருந்து சண்முகா மகா வித்தியாலய முஸ்லிம் ஆசிரியைகளுக்கு எதிராக நடந்த அபாயா பிரச்சினைக்கு ஏன் தீர்வு காணப்படவில்லை?
2. தோப்பூர் உப பிரதேச செயலகத்தை ஏன் தரம் உயரத்தவில்லை?
3. கருமலையூற்றூ பள்ளிவாயல் பிரச்சினைக்கு ஏன் தீர்வு காணப்படவில்லை?
4. முத்துநகர், வெள்ளைமணல், கருமலையூற்றூ, நாச்சிக்குடா, கப்பல்துறை போன்ற பிரதேசத்திலுள்ள துறைமுக அதிகார சபைக்குறிய காணிப் பிரச்சினைக்கு ஏன் தீர்வு காணப்படவில்லை?
5. குறிஞ்சாக்கேணிக்கான தனியான பிரதேச செயலகத்தை ஏன் பெற்றுக் கொடுக்கவில்லை?
6. தீயணைப்பு பிரிவை கிண்ணியாவில் ஏற்படுத்தப்போகிறேன் என்றீர்கள் ஏன் அதை செய்யமுடியவில்லை?
7. செல்வநகர் நீனாகேணி காணிப் பிரச்சினையை ஏன் தீர்க்க முடியவில்லை?
8. சட்டவிரோதமாக துறையடியில் கட்டப்பட்ட புத்தர் சிலையை அகற்றுவதற்காக மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் பேசுனீர்கள் ஏன் அகற்றவில்லை?
9. திருகோணமலை மாவட்டம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற மாவட்டமாகும் அங்கு ஒரு முஸ்லிம் அரசாங்க அதிபரை ஏன் நியமிக்கவில்லை?
10. தம்புள்ளை பள்ளிவாயல் பிரச்சினை ஏன் தீர்க்கவல்லை?
11. முன்னாள் பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் றுவான் விஜயவர்தன அவர்களை கிண்ணியாவுக்கு அழைத்து வந்தீர்கள். அவர் மூலமாக தனியார் காணிக்குள் அமைக்கப்பட்ட இரானுவ முகாமை அகற்றுனீர்களா? ஏன் முடியவில்லை?
12. மீனவர்களுடைய பிரச்சினையை தீர்த்துவிட்டேன் என்று கூறி எனது கட்சியை சேர்ந்த சட்டத்தரணி முஜீப் அவர்களும் உங்களுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருந்தார். தீர்க்க முடிந்தத்தா?
இப்படி எழுதிக்கொண்டே போகலாம் பல தீர்க்க முடியாத பிரச்சினைகள் இருக்கின்றன. உங்களுடைய அரசாங்கம் உங்களுடைய பிரதமர் உங்களுடைய அமைச்சர்கள் ஏன் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை.
Comments (0)
Facebook Comments (0)