மாணிக்கக்கல் அகழ்வில் காணப்படும் இணை உரிமை தொடர்பான சட்டத் தடை நீக்கப்படும்
மாணிக்கக்கல் அகழ்வுக்கான நிலத்தின் இணை உரிமை இல்லாத நபர்களுக்கு அனுமதி பெறுவதற்கான சட்டரீதியான தடையை நீக்குவதற்கான பொருத்தமான ஒழுங்குவிதிகளை கைத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அண்மையில் ஏற்றுக்கொண்டது.
கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான தயாசிறி ஜெயசேகர, லொஹான் ரத்வத்த, பிரசன்ன ரணவீர ஆகியோர் கலந்து கொண்டனர்.
1993ஆம் ஆண்டின் 50ஆம் இலக்க தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை சட்டத்தின் கீழ் கைத்தொழில் அமைச்சரால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒழுங்குவிதிகள் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 02 ஆம் திகதியிடப்பட்ட 2165/1 வர்த்தமானி அறிவிப்பு மற்றும் 2021 ஏப்ரல் 01 திகதியிடப்பட்ட 2221/49 எண் வர்த்தமானி அறிவிப்பு ஆகியவற்றில் வெளியிடப்பட்டுள்ளன.
இரத்தின சுரங்கத்தில் இணை உரிமையாளர் அல்லாத நபர்கள் இரத்தின சுரங்கத்திற்கான வரி பத்திரங்கள் மூலம் தொடர்புடைய உரிமத்தைப் பெற முடியும் என்று தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைத்தொழில் அமைச்சின் செயலாளர் மற்றும் ஏனைய அரச அதிகாரிகள் இதன்போது இணையத்தினூடாகக் கலந்துகொண்டனர்.
Comments (0)
Facebook Comments (0)