விவசாயத்திற்கு தேவையான பொருட்கள் இறக்குமதி செய்யும் அரசின் தீர்மானத்திற்கு பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் பாராட்டு
நீண்ட கால தீர்வுக்காக பரந்த ஈடுபாட்டின் அவசியத்தை வலியுறுத்துகிறது மற்றும் அர்ப்பணிப்பை காட்டுகிறது
நாட்டிற்கு உரம் மற்றும் விவசாய இரசாயனங்களை தனியார் துறை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை பாராட்டியுள்ள, இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) அனைத்துத் தரப்பினருக்கும் இணங்கக்கூடிய நீண்ட கால தீர்வை எட்டுவதற்கு அதிகாரிகளுக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளது.
தேயிலை, இறப்பர் மற்றும் பிற பெருந்தோட்ட வர்த்தக பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களை (RPCs) பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கம் - தடைக்கு வழிவகுத்த அடிப்படைக் காரணங்களைத் தீர்ப்பதற்கு முக்கிய பங்குதாரர்களிடையே ஒத்துழைப்பை வலியுறுத்தியது.
"நாட்டின் விவசாயம் மற்றும் பெருந்தோட்டத் துறைகளின் கோரிக்கைகளுக்கு அரசாங்கத்தின் முடிவையும் பதிலையும் நாங்கள் பாராட்டுகிறோம், மேலும் அதை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்" என பெருந்தோட்ட உரிமையாளர் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி ரொஷான் ராஜதுரை தெரிவித்தார்.
"இயற்கையாகவே, நாடு முழுவதும் உள்ள பல வாழ்வாதாரங்களை இது எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த விடயம் பெரும் விவாதத்தை உருவாக்கியது, இந்த விவேகமான முடிவு இப்போது பங்குதாரர்களிடையே ஒத்துழைப்புக்கான ஒரு முக்கியமான வாய்ப்பை அளிக்கிறது"
"நாட்டின் முதன்மையான பெருந்தோட்டக் கைத்தொழில் பிரதிநிதி என்ற வகையில், பெருந்தோட்ட உரிமையாளர் சம்மேளனம், அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கும், கரிம விவசாயத்தை ஏற்றுக்கொள்வதற்கான சாத்தியமான வாய்ப்புகளை அடையாளம் காண்பதற்கும் மற்றும் இந்த பார்வையை அடைவதற்கான ஒரு விரிவான பாதை வரைபடத்தை வெளிப்படுத்துவதற்கும் தனது முழு அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது"
முக்கியமாக ஏற்றுமதி செய்யும் பயிர்களின் உற்பத்தியாளர்களாக - இரசாயன பொருட்களுக்கான கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர் - RPCகள் விவசாய உள்ளீடுகளின் பயன்பாட்டில் தேயிலை மற்றும் இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் (TRI மற்றும் RRI) போன்ற நிறுவனங்களின் பரிந்துரைகளை நெருக்கமாக கடைபிடிக்கின்றன.
எவ்வாறாயினும், நாட்டில் பயிரிடப்படும் அனைத்து பயிர்களுக்கும், குறிப்பாக உள்நாட்டு சந்தையை இலக்காகக் கொண்ட பயிர்களுக்கு இது பொருந்தாது என்பதால், இது தொடர்பாக ஒரு பொறிமுறையை உருவாக்குவது முக்கியம் என்று பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் சுட்டிக்காட்டுகிறது.
அத்தகைய ஒத்துழைப்பு அனைத்து பங்குதாரர்களுக்கும் ஒரு வெற்றியாக இருக்கும் என PA மீண்டும் வலியுறுத்துகிறது. இது விவசாயத்திற்கு தேவையான பசளைகளின் பயன்பாட்டைக் குறைக்கும் - இயற்கை விவசாயத்தை நோக்கி நகரும் அரசாங்கத்தின் பார்வையில் ஒரு முக்கியமான மைல்கல், மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை உறுதிசெய்து விவசாயிகள் மற்றும் தனியார் துறையினருக்கு அதிக ஸ்திரத்தன்மை மற்றும் வழிகாட்டுதலை வழங்கும்.
Comments (0)
Facebook Comments (0)