கொவிட் தடுப்பூசி ஏற்றிக்கொண்டால் மயக்க மருந்து எடுக்க முடியுமா?
-முன்ஸிப் அஹமட்-
"கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்ட எவரும் எந்த வகையான மயக்க மருந்துகளையும், உள்ளூர் மயக்க மருந்து அல்லது பல்மருத்துவரின் மயக்க மருந்துகளையும் கூட உட்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது" எனும் தகவலொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
இவ்வாறு மயக்க மருந்து எடுத்துக் கொண்டால் அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும், தடுப்பூசி போடப்பட்டவர்கள் 04 வாரங்களின் பின்னறே மயக்க மருந்துகள் எடுத்துக் கொள்ள முடியும் என்றும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி தொடர்பில் இவ்வாறு பல்வேறுபட்ட 'கதை'கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதை நாம் காணக் கூடியதாக உள்ளது.
மேலே குறிப்பிடப்பட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டிருக்கும் வியடத்தின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ளும் பொருட்டு அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எஸ். அகிலனை தொடர்பு கொண்டு கேட்டபோது, “கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் வழமை போன்று அனைத்து செயற்பாடுகளிலும் ஈடுபடலாம்” எனக்டர் கூறினார்.
“தடுப்பூசி போட்டுக் கொண்டோம் என்று தவிர்க்க வேண்டியவை எதுவும் இல்லை. பலர் 'குளிக்கலாமா' எனக் கேட்கின்றனர். தாராளமாகவே குளிக்கலாம்” என்றும் அவர் விளக்கினார்.
Comments (0)
Facebook Comments (0)