25 மாவட்டங்களில் உள்ள பெண் தொழில்முனைவோரை அங்கீகரிக்கும் நிகழ்வு
பெண் தொழில்முனைவோர் இலங்கை பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பதுடன் குறிப்பாக கொவிட்-19 நெருக்கடியில் தமது சமூகத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பாரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மகளிர் மாதத்தை நினைவுகூரும் வகையில் , மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, அறநெறிப் பாடசாலைகள், கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சினால் பெண்கள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டது
25 மாவட்டங்களில் உள்ள பெண் தொழில்முனைவோர் மற்றும் பெண்கள் மேம்பாட்டு அதிகாரிகளை அங்கீகரிக்கும் நிகழ்வில் இலங்கையில் உள்ள ஐ.நா. பெண்கள் மற்றும் இலங்கையில் உள்ள ஜப்பான் தூதரகம் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
பெரும் மூலோபாயத்தின் ஒரு பகுதியான, பாலின சமத்துவம் மற்றும் நாட்டில் பெண்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்து அளிப்பதற்கான முன்னேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதில் இலங்கையில் உள்ள ஐ.நா. பெண்கள், ஜப்பான் அரசு மற்றும் இராஜாங்க அமைச்சு இணைந்து பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகளை வகுத்து நடைமுறைபடுத்துவதற்கு உகந்த சூழலை நிறுவுவதற்கான செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதேநேரத்தில் கொவிட் 19 நெருக்கடியில் இருந்து பொருளாதார மீள் எழுச்சியை உறுதி செய்யும் காரணிகளாக பெண்களை பொருளாதார ரீதியில் வலுவூட்டல் மற்றும் அவர்களின் வணிகங்களை தக்கவைத்துகொள்வதற்கான திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி வசதிகளை அளித்தல் என்பவை முக்கிய காரணிகளாக காணப்படுகின்றன.
இந்நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் மாண்புமிகு. பியால் நிஷாந்த டி சில்வா,இராஜாங்க செயலாளர் திருமதி கே.எம்.எஸ்.டி. ஜயசேகர் மேலதிக செயலாளர் (அபிவிருத்தி), செல்வி என்.எச்.எம்.டப்ளியூ.டப்ளியூ நில்மினி ஹேரத் மற்றும் இலங்கை மகளிர் பணியகத்தின் நிர்வாகக்குழு அங்கத்தினரான திருமதி சம்பா உபசேன மற்றும் இலங்கையில் உள்ள ஜப்பான் தூதரகத்தில் ஆலோசகரான திரு அகிர ஹோகமுற இலங்கையில் ஐ.நா. பெண்களின் வேலைதிட்ட அலுவலர்களான திருமதி பிரதீபா குலசேகர மற்றும் திருமதி அவந்தி கலன்சூரிய பங்குபற்றினர்.
ஐக்கிய நாடுகளின் பெண்கள் என்பது பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் அதிகாரம் ஆகியவற்றிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஐ.நா.வின் ஒரு தொண்டு நிறுவனம் ஆகும். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான உலகளாவிய சாம்பியனான ஐ.நா. பெண்கள் நிறுவனம் உலகளவில் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முன்னேற்றத்தை துரிதப்படுத்துவற்காக நிறுவப்பட்ட நிறுவனமாகும்.
Comments (0)
Facebook Comments (0)