உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலத்தினை நீடிக்க நடவடிக்கை

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலத்தினை நீடிக்க நடவடிக்கை

உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேர்தல் நடத்தாமல் அதன் பதவிக் காலத்தினை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க அரசாங்கம்  நடவடிக்கை எடுத்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 24 மாநாகர சபைகளும், 41 நகர சபைகளும், 275 பிரதேச சபைகளும் என மொத்தமாக 340 உள்ளூராட்சி மன்றங்கள் காணப்படுகின்றன.

இவற்றின் பதவிக் காலம் அடுத்த வருடம் பெப்ரவரியில் நிறைவடைகின்றது. 

தற்போது நாடு நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி மற்றும் தொற்று நோய் அபாயம் போன்ற காரணமாக உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேர்தல் நடத்தாமல் பதவிக் காலத்தினை நீடிக்க தீர்மானித்துள்ளது.

நாடளாவிய ரீதியிலுள்ள 4,917 உள்ளூராட்சி மன்ற வட்டாரங்களின் அபிவிருத்திகாக தலா 4 மில்லியன் ரூபா வீதம் 19,668 மில்லியன் ரூபா 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஒதுக்கியுள்ளார்.

இதனையடுத்தே உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் கால நீடிப்பு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.